செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் பல இந்திய சமையலறைகளில் உணவுகளை சமைப்பதற்கும் சேமிப்பதற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Advertisment
ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது உட்பட, அத்தகைய பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தாலும், அத்தகைய சமையல் பாத்திரங்கள் சாத்தியமான அபாயங்களையும் ஏற்படுத்தலாம். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் சில வகையான உணவுகளை சமைத்து சேமித்து வைப்பது பற்றி வல்லுநர்கள் என்ன சொன்னார்கள் என்பதை பாருங்கள்.
செம்பு மற்றும் பித்தளை, உப்பு மற்றும் அமில உணவுகள் போன்ற பல்வேறு உணவுகளை சூடாக்கும் போது எளிதில் வினைபுரியும். எனவே இந்த உலோகங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
செம்பு மற்றும் பித்தளை சமையல் பாத்திரங்களில் அசிடிக் உணவுகள் சமைக்கும் போது அதிகளவு கசிவு ஏற்படலாம், இது ரசாயன நச்சுத்தன்மை மற்றும் நோய்க்கு வழிவகுக்கும், என்று உணவியல் நிபுணர் ஐஸ்வர்யா விச்சாரே கூறினார்.
மோர், லஸ்ஸி, ஜாம், சாஸ், ஊறுகாய், பால், பாலாடைக்கட்டி மற்றும் தயிர் போன்ற உணவுகள் மற்றும் பானங்கள், பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களில் சேமிக்கப்படக்கூடாது, ஏனெனில் அவை ரசாயன எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும்.
இந்த எதிர்வினை நச்சு கலவைகளை உருவாக்கத் தொடங்கும், இது உணவு விஷத்தை ஏற்படுத்தும், என்று அவர் கூறினார்.
லைஃப் ஸ்டைல் நிபுணர் அரூஷி கர்க் கூறுகையில், சில உணவுகளை இந்த பாத்திரங்களில் நீண்ட நேரம் சேமிக்கக்கூடாது, ஏனெனில் உலோகம் உணவுடன் வினைபுரிந்து வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
சில பழங்கள் மற்றும் சாலடுகள் இந்த உலோகங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்ஸிஜனேற்ற விளைவுகளால் பழுப்பு அல்லது பச்சை நிறமாக மாறும். இது உணவை விரும்பத்தகாததாக மாற்றும், மேலும் புளிப்பு மற்றும் உலோக சுவையை தெளிவாக உணர முடியும்.
இதில், சமைக்கும் போது எதிர்வினை விளைவைக் குறைக்க, கடைசி கட்டத்தில் உப்பு சேர்க்க கார்க் அறிவுறுத்தினார்.
இதேபோல், பாத்திரத்தில் மெட்டல் கோட்டிங் இருந்தால் மட்டுமே பாலை கொதிக்க வைக்க வேண்டும் அல்லது இந்த வகையான பாத்திரங்களில் சமைக்கலாம். மெட்டல் கோட்டிங் இல்லாத செம்பு அல்லது பித்தளை பாத்திரங்களில் சேமித்து வைத்தால், உணவுகள் கேடாக மாறும், என்று அவர் வலியுறுத்தினார்.
பித்தளை அல்லது செப்பு பாத்திரங்களை பயன்படுத்தும் போது, அதிலிருக்கும் மெட்டல் லைனிங் காலப்போக்கில் மறைகிறது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தொடர்ச்சியான பயன்பாட்டிற்காக ஒவ்வொரு 6-8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கோட்டிங் செய்யப்பட வேண்டும்.
தகரம் பூசப்பட்ட பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களில் நீண்ட நேரம் ஆழமாக வறுப்பதையும் ஒருவர் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதிக வெப்பநிலை நேரடியாக எண்ணெய் அல்லது உணவில், லைனிங் கரைந்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”