இட்லி, தோசை என்றால் உடனே 10 நிமிடத்தில் தேங்காய் சட்னி செய்து கொடுத்திடுவாங்க. எப்போதும் ஒரே மாதிரி தேங்காய் சட்னி சாப்பிடுவது சற்று சலிப்பாக இருக்கும். அதில் சற்று வித்தியாசமாக கொடுத்தாலும் உணவு ரசித்து, உற்சாகத்துடன் சாப்பிடுவார்கள். அந்த் வகையில் வித்தியாசமான தேங்காய் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய்- அரை கப்
பொட்டுக் கடலை- கால் கப்
பூண்டு- 1
இஞ்சி- சிறிதளவு
பச்சை மிளகாய்- 2
புளி- சிறிதளவு
கொத்தமல்லி- 1 கைப்பிடி
புதினா இலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்- சிறிதளவு
கடுகு, உளுந்தம் பருப்பு- சிறிதளவு
செய்முறை
முதலில் தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். மேலே சொல்லப்பட்ட பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜார் எடுத்து அதில், தேங்காய், பொட்டுக் கடலை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், புளி, கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு, புதினா இலை சிறிதளவு, உப்பு, தண்ணீர் சேர்த்து என அனைத்தையும் சேர்த்து மூடி அரைக்கவும். இப்போது சட்னி ரெடி. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் வித்தியாசமான சுவை, மண மணக்கும் தேங்காய் சட்னி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“