கொத்தமல்லி கொத்து கொத்தாக முளைக்கும்… மாடி தோட்டத்தில் இப்படி விதைத்து பாருங்க!
மாடித் தோட்டத்தில் கொத்தமல்லியை எவ்வாறு வளர்க்கலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம். இந்த முறை எளிமையாக இருப்பதால், எல்லோராலும் சுலபமாக கொத்தமல்லியை அறுவடை செய்ய முடியும்.
மாடித் தோட்டத்தில் கொத்தமல்லியை எவ்வாறு வளர்க்கலாம் என்று இந்தக் குறிப்பில் காணலாம். இந்த முறை எளிமையாக இருப்பதால், எல்லோராலும் சுலபமாக கொத்தமல்லியை அறுவடை செய்ய முடியும்.
நமக்கு இருக்கும் சிறிய இடத்தில் கூட ஏதாவது ஒரு செடி வளர்க்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள். அதிலும், உணவுக்கு பயன்படக் கூடிய தாவரங்கள் மற்றும் காய்கறிகளை மாடித் தோட்டத்தில் வளர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள். அந்த வகையில், வீட்டிலேயே கொத்தமல்லி வளர்க்கும் முறை குறித்து தற்போது பார்க்கலாம்.
Advertisment
அதன்படி, வீட்டில் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி விதைகளை இதற்கு பயன்படுத்தலாம். இந்த விதைகளை பூரிக் கட்டையைக் கொண்டு லேசாக உடைத்துக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை மண்ணில் விதைப்பதற்கு முன்பாக, அதனை கிளறி விட வேண்டும். அதன் பின்னர், விதைகளை தூவி விடலாம்.
இவ்வாறு விதைகளை தூவி விட்டதும், தென்னை நார் கழிவுகளை அதன் மீது போட்டு மூட வேண்டும். இதையடுத்து, லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். இதற்கு மேல் ஒரு காட்டன் துணியை போட்டு, அதன் மீதும் லேசாக தண்ணீர் தெளித்து விட வேண்டும்.
இந்தக் காட்டன் துணிக்கு மேலாக சில விதைகளில் இருந்து இலை துளிர் விடத் தொடங்கும். அப்போது மட்டும் இந்தத் துணியை எடுத்தால் போதுமானதாக இருக்கும். இந்த முறையை பின்பற்றினால், சுமார் 10 நாட்களில் கொத்தமல்லி செடி வளரத் தொடங்கும்.
Advertisment
Advertisements
இதனை அதிகபட்சமாக 25 முதல் 35 நாட்களில் அறுவடை செய்து விடலாம். கொத்தமல்லியில் இயற்கையாகவே வாசனை இருப்பதால், பூச்சித் தாக்குதல் இதில் இருக்காது. எனவே, இரசாயனங்கள் கலந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை இந்தச் செடியில் பயன்படுத்த வேண்டாம்.