Kothamalli Chutney Pudhina Chutney Recipe Tamil : காலை உணவை மேலும் ஸ்பெஷலாக்க, இந்த புதினா கொத்தமல்லி சட்னியை செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும். இதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்திருப்பதால், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும்கூட.
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
புதினா (நறுக்கியது) - 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் (அரைத்தது) - 1 கப்
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
புளி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
தாளிக்க :
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகம், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
இப்போது புதினா, கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அல்லது சிறிதாக சுருங்கும் வரை வதக்கவும்.
இந்தக் கலவையை முழுவதுமாக குளிர்வித்து, மிக்சிக்கு மாற்றவும்.
அதனோடு தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைக்கவும்.
அரைத்த கொத்தமல்லி புதினா சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
இப்போது கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சட்னியோடு சேர்க்கவும்.
சூடான இட்லி, தோசையோடு, அரைத்த கொத்தமல்லி புதினா சட்னியை பரிமாறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"