மக்காச் சோளம் கீரை கடைசல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
மக்காச் சோளம் – கால் கப்
பாலக் கீரை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 10 பல்
காய்ந்த மிளகாய் – 2
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
தனியா தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு
புலி கரைச்சல் – கால் கப்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலக் கீரை மற்றும் பச்சை மிளகாய், தண்ணீர் சிறிதளவு சேர்த்து பாதி வேகவிட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேபில்லை, பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மக்காசோளம், தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, புளி கரைச்சல் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் வேக விட்டு அரைத்த கீரை விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான, ஆரோக்கியமான மக்காச் சோள கீரை கடைசல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“