வெள்ளை சோள உருண்டை சாதம் ஒரு முறை, செய்து சாப்பிடுங்க உடலுக்கு ரொம்ப நல்லது.
தேவையான பொருட்கள்
வெள்ளை சோளம் 2 கப்
6 கப் தண்ணீர்
உப்பு
மிளகு பொடித்தது கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது 2 ஸ்பூன்
செய்முறை : சோளத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். இதை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து இதை வடிகட்டி மிக்ஸியில் அரைத்துகொள்ள வேண்டும். இந்த பொடியை தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்த சோளத்தை சேர்த்து, உப்பு சேர்த்து 25 நிமிடங்கங்கள் வேக வைக்க வேண்டும். தொடர்ந்து கட்டியாகும் வரை காத்திருக்க வேண்டும். அடுப்பை அணைத்து அதில் மிளகு பொடி, பச்சை மிளகாய் நறுக்கியது சேர்த்து கிளர வேண்டும், தொடர்ந்து இதை உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். இதை நாம் விருப்பபட்ட குழம்புடன் சேர்த்து சாப்பிடுலாம்.