சுவையான, குழந்தைகளுக்குப் பிடித்த வெஜிடபிள் ரோல் ரெசிபி வீட்டிலேயே செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான அளவு
கான் பிளவர் மாவு- 2 கப்
உருளைக்கிழங்கு - 2
முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட் – 1 கப் (நறுக்கியது)
பச்சைப் பட்டாணி – 1 கப்
கடுகு, உளுந்தம்பருப்பு- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
மிளகுத் தூள்- சிறிதளவு
கரம் மசாலா- தேவையான அளவு
தக்காளி- 2
மஞ்சள் தூள்- சிறிதளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும்.
வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அடுத்து மசித்த உருளைக்கிழங்கு இறுதியாக கொத்தமல்லி போட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
அடுத்து கார்ன் பிளவர் மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி போல் பிசைந்து, செய்த மசாலாவை மாவிற்கு நடுவில் வைத்து பூரணம் போல் மடித்து வைக்கவும். இப்போது கடாயில் மீண்டும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெஜிடபிள் ரோல் போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான கார்ன் வெஜிடபிள் ரோல் ரெடி.