தேன், பூண்டு… உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் சிம்பிள் உணவுகள்

நுரையீரலை, வைரஸானது நேரடியாக தாக்கும். இதனால், சுவாசித்தலின் அளவு குறைந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சித் திணறல் ஏற்படக்கூடும். இத்தகைய சூழல் ஏற்படமால் தடுப்பதற்காக, நுரையீரலை நமது உணவுப் பழக்க வழக்கத்தின் மூலம் கீழ்காணும் முறைகளின் மூலம் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

Healthy Tips for Strengthen Your Lungs in Tamil : உடலில், நுரையீரல் நன்றாக செயல்படுவது முக்கியமானதாகும். நாம் சுவாசிக்கும் காற்றை நுரையீரல் நன்றாக வடிகட்டிய பின்னரே, ஆக்சிஜனை பிறித்தெடுத்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. நுரையீரல் சரியாக தனது பணியை செய்யாவிட்டால், ஆஸ்துமா நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் தாக்கக் கூடும்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில்,60 முதல் 65 சதவீதம் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. அவர்களின் ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைகிறது. 2 முதல் 3 நாட்களுக்குள், நிலை 80 க்குக் கீழே செல்வதால், உடனடியாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள, நுரையீரலை வலுப்படுத்துவது முக்கியமானதாகும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் நுரையீரலை, வைரஸானது நேரடியாக தாக்கும். இதனால், சுவாசித்தலின் அளவு குறைந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சித் திணறல் ஏற்படக்கூடும். இத்தகைய சூழல் ஏற்படமால் தடுப்பதற்காக, நுரையீரலை நமது உணவுப் பழக்க வழக்கத்தின் மூலம் கீழ்காணும் முறைகளின் மூலம் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

பூண்டு :

பூண்டில், ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு பண்புகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் மிகவும் உடல் சூடாக உணர்ந்தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள்.

தேன் :

தேன் பாக்டீரியா எதிர்ப்பு பொருள்களை கொண்டுள்ளதால், ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தேன் நுரையீரலை வலுப்படுத்தும் முக்கிய பொருள் ஆகும். சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கலாம். தேநீர், காபி போன்றவற்றில் சர்க்கரைக்கு தேனை சேர்த்தும் பயன் பெறலாம்.

மஞ்சள் :

மஞ்சள் அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுக்காக்கும் தன்மை கொண்டது. இதில், ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ளது. தினமும் தூக்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம். மஞ்சளுடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, தேநீர் போல அருந்தலாம். இது, நுரையீரலை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

அத்திப் பழம் :

ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன. அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுபடுத்தும். இதய ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகும்.

துளசி :

துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன. இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona breathlessness things strengthen lungs increase oxygen

Next Story
காலையில் தேன், நெல்லி… எவ்ளோ நன்மை இருக்குனு பாருங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express