/tamil-ie/media/media_files/uploads/2020/05/template-2020-05-14T143209.182.jpg)
corona virus, covid 19 epf claims, withdraw funds from epf account, epfo, universal account number , EPFO, EPFO news, EPFO news in tami. EPFO latest news, EPFO latest news in tamil
கோவிட்-19 காரணமாக வருவாயை இழந்து மக்கள் எதிர்கொள்ளும் பண நெருக்கடியை சமாளிக்க ஒரு நிவாரணத்தை கொடுப்பதற்க்காக சம்பளம் வாங்கும் பணியாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கிலிருந்து non-refundable முன்பணத்தை எடுப்பதற்கு அரசு அனுமதித்துள்ளது. ஒரு உறுப்பினர் தனது ஈபிஎப் கணக்கிலிருந்து 75 சதவிகித நிலுவைத் தொகை அல்லது அகவலைபடியுடன் மூன்று மாத அடிப்படை சம்பளம் ஆகியவற்றில் எது குறைவாக வருகிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம். நிலுவைத் தொகை என்பது ஊழியருடைய பங்கு, முதலாளியுடைய பங்கு மற்றும் வட்டியை உள்ளடக்கியது ஆகும். ஒரு உறுப்பினர் பணியிலிருக்கும் போதே இதைப் பெறலாம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
முன்பணம் என்பது ஒரே ஒரு முறை தான் கிடைக்கும் அதுவும் தொற்று நோய் நிலவும் வரை மட்டுமே கிடைக்கும். வேறு ஏதாவது முன்பணம் நிலுவையில் இருக்கும் போது கோவிட்-19 உரிமைகோரலுக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படுகிறது, என ஈபிஎப்ஓ தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு உறுப்பினருடைய Universal Account Number (UAN) ஆதார் உடன் இணைக்கப்பட்டு, வங்கி கணக்கு KYC மற்றும் கைபேசி எண்ணுடனும் இணைக்கப்பட்டிருந்தால் அவர் இந்த மாதிரியான உரிமைகோரலுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எப்படி non-refundable முன்பணத்தை பெறுவது
ஒரு உறுப்பினர் கோவிட்-19 ஆன்லைன் முன்பணம் உரிமை கோரலுக்கான விண்ணப்பத்தை ஈபிஎப்ஓ வின் member interface portalலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface செய்யலாம். பிறகு ஆன்லைன் Services Claim (Form-31,19,10C & 10D) க்கு செல்ல வேண்டும். உரிமை கோரலை (claims) விரைவாக பெற உறுப்பினரின் பெயர் அச்சடிக்கப்பட்ட cheque leaf ஐ அல்லது வங்கி பாஸ் புக் முதல் பக்கத்தை அல்லது பெயர், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு அடங்கியுள்ள வங்கி அறிக்கையை (bank statement) அப்லோட் செய்வது கட்டாயமாகும். KYC ல் அப்லொட் செய்யப்பட்ட வங்கி கணக்கு எண் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்யவும், தவறாக பணம் செலுத்துவதை தடுக்கவும் இது தேவைப்படுகிறது.
UMANG (Unified Mobile Application for New-age Governance) ஆப்பை (app) கைபேசியில் பதிவிரக்கம் செய்தும் ஒரு உறுப்பினர் உரிமைகோரலுக்கான விண்ணப்பம் செய்யலாம். அவரது UAN எண்ணை வைத்து லாகின் செய்து, UAN உடன் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் கிடைக்கப்பெற்ற OTP எண் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உரிமைகோரல்களை செயலாக்குதல் (Processing of claims)
உரிமை கோரல்களை செயலாக்கிய பிறகு ஈபிஎப்ஓ வங்கிக்கு பணத்தை வரவு வைக்க ஒரு cheque ஐ அனுப்பும். உறுப்பினரின் வங்கி கணக்கில் முன் பணத்தை வரவு வைக்க வங்கி ஒன்று முதல் மூன்று வேலை நாட்களை எடுத்துக் கொள்ளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.