Corona virus, india lockdown, sbi, hdfc bank, emi moratorium, otp, fraud, hackers, bank informations, steal, sbi news, sbi news in tamil, sbi latest news, sbi latest news in tamil
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஒரு மோசமான சூழ்நிலை நிலவிவரும் போதும், மோசடிகாரர்கள் ஓய்வு எடுக்கவில்லை என்று தான் தெரிகிறது. மூன்று மாத காலத்துக்கு கடன் தவனைகள், ஈஎம்ஐ கட்டுவதிலிருந்து விலக்கு வழங்கியுள்ள பாரத ரிசர்வ் வங்கியின் இந்த வசதியை பயன்படுத்த நினைக்கும் வெகுளியான வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு மோசடிகாரர்கள் இப்போது புதிய வழிகளை கண்டுபிடித்து வருகின்றனர். வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் மோசமான வழிகள் மற்றும் கடன் ஈஎம்ஐ களை தள்ளிப் போடுவதற்கு அவர்கள் செய்யக்கூடாதவை பற்றியும் வணிக வங்கிகளான ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்து வருகின்றன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
”இணைய வழி மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளை தொடர்ந்து கண்டுபிடித்து வருகின்றனர். இந்த சைபர் குற்றவாளிகளை வெல்ல ஒரே வழி எச்சரிக்கையாக இருப்பதும் விழிப்போடு இருப்பதும் தான். ஈஎம்ஐ ஒத்திவைப்புக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP) பகிர்வு தேவையில்லை. உங்கள் OTP ஐ பகிர வேண்டாம்” என பாரத ஸ்டேட் வங்கி டிவீட் செய்துள்ளது.
Advertisment
Advertisements
ஈஎம்ஐ ஒத்திவைப்புக்கு ஹெச்டிஎப்சி வங்கி ஒருபோதும் OTP, இணையவழி வங்கி சேவை (Net Banking), கைபேசி வழி வங்கி சேவை (Mobile Banking) கடவுச்சொல் (password), Customer ID, UPI PIN போன்றவற்றை கேட்பதில்லை, என தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் கூறுகிறது.
மோசடிகாரர்கள் என்ன செய்வார்கள்
மோசடிகாரர்கள் வாடிக்கையாளர்களை தொலைபேசி வழியாக அழைத்து அவர்களது ஈஎம்ஐ’ஐ ஒத்திப்போடுவதற்காக அவர்களது OTP ஐ பகிர சொல்வார்கள். ஒருவேளை வாடிக்கையாளர்கள் தங்களது OTP ஐ பகிர்ந்துவிட்டால் மோசடிகாரர்கள் உடனடியாக அவர்களது பணத்தை களவாடி விடுவார்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்
உங்களது தனிப்பட்ட வங்கி விவரங்களையோ அல்லது OTP’ஐயோ பகிர சொல்லி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு ஒருபோதும் நீங்கள் பதிலளிக்கக் கூடாது.
வங்கி ஈஎம்ஐ’ஐ ஒத்திப்போட உங்கள் OTP ஐ பகிரச் சொல்லும் சைபர் மோசடிகாரர்களிடம் மிக எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். ஈஎம்ஐ ஒத்திவைப்புக்கு OTP பகிர்வு தேவையில்லை. உங்கள் OTP ஐ பகிர வேண்டாம், என PIB Fact Check team மும் டிவீட் செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil