Advertisment

கொரோனா வைரஸ் ஊரடங்கு : இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள் தான்...

கடினமான காலத்தில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம், எனவே அவர்களை வங்கியின் தடையற்ற டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்த கேட்டுக் கொள்கிறோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indianbank netbanking online

indianbank netbanking online

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசுடமையாக்கப்பட்ட வங்கியான சிண்டிகேட் வங்கி தனது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள். ஏடிஎம், வங்கி கிளைகள் மற்றும் door step வங்கி சேவை ஆகியவை வரையறுக்கப்படும் மேலும் சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் அவை மூடப்படலாம், என சிண்டிகேட் வங்கி தெரிவித்துள்ளது. மனித தொடர்பை குறைப்பதற்காக இது செயல்படுத்தப்படுகிறது. எனினும் டிஜிட்டல் வங்கி சேவைகளான கைபேசி வழி வங்கி சேவைகள் மற்றும் இணையவழி வங்கி சேவை ஆகியவை தொடர்ந்து செயல்படும் என சிண்டிகேட் வங்கி ஒரு செய்தி குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

பாதுகாப்பாக செலுத்துங்கள் - பாதுகாப்பாக இருங்கள் (Pay Safe-Stay Safe) என்ற ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் மருத்துவ உதவிக்காக இந்தியன் வங்கி முன்னெடுத்துள்ளது. ஏடிஎம்கள் மற்றும் வங்கிகள், அதிகப்படியான எண்ணிக்கையில் மக்கள் அடிக்கடி வருகின்ற முக்கியமான பகுதிகளாகும். இங்கு ஏற்படுகின்ற மனித தொடர்பு மிக விரைவாக பரவக்கூடிய கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஒரு தடையாக இருக்கும் என மருத்துவ உலகம் பயப்படுகிறது.

இந்த கடினமான காலத்தில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறோம், எனவே அவர்களை வங்கியின் தடையற்ற டிஜிட்டல் வங்கி சேவையை பயன்படுத்த கேட்டுக் கொள்கிறோம், என இந்தியன் வங்கியின் MD மற்றும் CEO Padmaja Chunduru கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லா நாட்களிலும் ஒவ்வொரு வங்கி கிளைகளிலும் 50 சதவிகித வங்கி ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் மேலும் முக்கியத்துவம் இல்லாத பணிகள் அடையாளம் காணப்பட்டு வீட்டிலிருந்து வேலை செய்வது மூலம் செயல்படுத்தப்படும், என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

சில மருத்துவமனைகளுடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் அதன்படி எங்கள் வங்கி பணியாளர்கள் யாருக்காவது எதாவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் தொலைபேசி மூலம் அந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுடன் ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனை பெறப்படும். மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் ஏற்பாடு செய்ய நாங்கள் உதவுவோம், என இந்தியன் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

ஏதாவது பணியாளருக்கு பரிசோதனை முடிவு பாசிடிவ்வாக வந்தால் அவருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, சிகிச்சை காலத்தில் அளிக்கப்படும். இதற்கிடையில் அனைத்து வங்கி கிளை மற்றும் அலுவலக வளாகங்களிலும் போதுமான சுத்தகரிப்பு நடவடிக்கைகளை தினமும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மேலும் கூறப்பட்டுள்ளது.

நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்படக்கூடிய தொடர்பை தடுப்பதற்காக சிண்டிகேட் வங்கி passbook printing சேவைகளை தங்கள் வங்கி கிளைகளில் வழங்காது என்றும் அந்த சேவையை வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து வங்கிகளையும் பொதுமக்களின் வசதிக்காக மாற்று விநியோக சேனல்கள் மூலம் வங்கி சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கான Business Continuity Plan (BCP) தயாரிக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம் Indian Banks' Association (IBA) கேடுக்கொண்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Indian Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment