பொது முடக்கத்திற்கு பிறகும் காஷ்மீரின் கைவினை தொழில் இருக்குமா?

சர்வதேச சந்தையில் காஷ்மீரின் கைவினைப்பொருட்களுக்கு பெரிய சந்தை உள்ளது

By: Updated: May 10, 2020, 02:34:19 PM

35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள், நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கால் துன்பத்தில் இருக்கின்றனர்.

ஊரடங்கு நாட்களில் நம்மில் பெரும்பாலானோல் வீடுகளில் அடங்கிக்கிடக்கின்றோம். பல மாதங்களாக வீடுகளில் முடங்கிக்கிடக்கின்றோம் என காகிதக்கூழ் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் கைவினைப்பொருட்களை உருவாக்கும் கலைஞர் ஹக்கீம் குலாம் கூறுகிறார். ஸ்ரீநகர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கைவினைக்கலைஞர்கள், நிலைமை சீராகும் காலத்தை எதிர்பார்த்து செயலற்று அமர்ந்திருக்கிறார்கள். மூலப்பொருட்கள் வைத்திருப்பவர்கள், சில கைவினைப்பொருட்களை செய்து, குறைவான அளவில் விற்பனை செய்து வருகிறார்கள். மற்றவர்கள் எதுவும் தயாரிக்காமல், விற்பனையும் செய்யாமல் இருக்கிறார்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

காகித கூழ் கொண்டு தயாரிக்கப்படும் காஷ்மீரின் கைவினைப்பொருட்கள், மரம், மரக்கூழ் மற்றும் காகித கழிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்த நாள் முதல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கிறோம். ஆகஸ்ட் மாதம் முதல் காலவரையற்ற ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த கோவிட் – 19 ஊரடங்கு அவர்களின் துயரத்தை மேலும் அதிகரித்துவிட்டதோடு மட்டுமின்றி, எதிர்காலத்தையே சிதைத்துவிட்டது. இந்த கலை ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் பிரசித்தி பெற்றது. இந்த கலைஞர்கள் அப்பகுதிகளில் குவிந்து கிடக்கிறார்கள். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள், அவர்களிடம் வணிகம் செய்யும் சிறு மற்றும் பெரிய வணிகர்கள் இங்கு உள்ளதாக ஜம்மு – காஷ்மீரின் அபெக்ஸ் மார்க்கெட்டிங் பெடரேசனின் துணைப்பொது மேலாளர் மக்பூர் பாரூக்கி கூறுகிறார். இந்த பெடரேஷன் பல்வேறு கண்காட்சிகளையும், மாநில அரசுடன் சேர்த்து, இக்கலைஞர்களின் வளர்ச்சிக்காக நடத்தி வருகிறது. ஆனால் இந்தாண்டு அதுபோன்ற கண்காட்சிகள் நடைபெறவில்லை என அவர் கூறுகிறார். எல்லாமே மூடப்பட்டுள்ளது, மாநிலத்தில் அண்மையில் நடைபெற்றுள்ள அரசியல் வளர்ச்சியின் காரணமாக, யாரும், நூறுக்கும் மேற்பட்டவர்களை ஓரிடத்தில் சேர்த்து, ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாததால், இந்தாண்டு கண்காட்சி நடைபெறவில்லை என்று பாரூக்கி மேலும் கூறுகிறார். குலாம் குடும்பத்தில் 4 பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர் 12க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளார். அவர் நாடு முழுவதும் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு கண்காட்சிகளில் கலந்துகொள்வார். தஸ்த்காரி ஹாட் சமிதி, சூரஜ்கந்த் கிராப்ட்ஸ் மேளா, டில்லி ஹாட் கண்காட்சி அல்லது பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெறும் கண்காட்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். கடந்த ஆண்டு முதல் மாநிலத்தில் போடப்பட்டுள்ள பயணத்தடைகள் மட்டும் அவர் கண்காட்சிகளில் கலந்துகொள்வதை தடுக்கவில்லை. உள்ளூர் தொழிலும் அதற்கு காரணம், சுற்றுலா இந்த பள்ளத்தாக்கில் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ள கடைகளுக்கு தரமான பொருட்களை நான் அனுப்பி வைப்பேன், ஆனால் சுற்றுலா பெருமளவில் பாதிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அவர் கூறுகிறார்.

 

பள்ளத்தாக்கில் உள்ள காகித கூழ் கைவினை கலைஞர்களுக்கு (ஸ்ரீநகரில் 35 ஆயிரம் மற்றும் பத்காம் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேர் உள்ளனர்) கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வதாரமாக இருந்த தொழில். நினைவு பரிசுகள் செய்வது, தாம்பாளங்கள், கூடைகள், சிலைகள், சுவரில் மாற்றும் அலங்காரப்பொருட்கள், பேனா ஸ்டாண்டுகள் போன்றவற்றை செய்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஒரு இருண்ட எதிர்காலமே காத்திருக்கிறது. இந்த கலக்கமான நேரத்திலும், ஒற்றுமை மட்டுமே நம்மை காத்து வருகிறது. இந்த ஊரடங்கினால், நம்மிடம் பணமில்லை எந்த பொருளையும் விற்கமுடியவில்லை என்றாலும், ஸ்ரீநகரில் உள்ள எந்தவொரு கைவினைக்கலைஞரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் மற்றவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்துகொள்கிறோம் என்று குலாம் கூறுகிறார். அழிந்துவரும் இந்த கலையை காப்பாற்ற அரசிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த உதவியும் வருவதில்லை என்று பாரூக்கி கூறுகிறார்.
இத்தொழில் பின்னடைவை சந்தித்து வருவதை ஜம்மு – காஷ்மீர் கைவினைக்கலைஞர்கள் சங்க இயக்குனர் மஸ்ரத் உல் இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறார். அந்த கைவினை கலைஞர்கள் பெரும்பாலானோரிடம் மூலப்பொருட்கள் இருந்தும், ஏற்கனவே பெறப்பட்ட வேலைகள் இருந்தும், ஊரடங்கை நீட்டித்தால், அவற்றை செய்து முடிப்பதில், அவர்களுக்கு நிறைய சிரமம் உள்ளது. இணைய சேவை கிடைக்காததால், கடந்தாண்டு விற்பனை பாதிக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். மற்ற கைவினைத்தொழில்களும் மாநிலத்தில் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். பாண்டிபூரா மற்றும் பாரமுல்லாவைச் சேர்ந்த கம்பள நெசவாளர்கள், பத்கம் மற்றும் சூஸ்னியைச் சேர்ந்த காஷ்மீர கம்பளி தயாரிப்பாளர்கள் என காஷ்மீரின் அனைத்து கைவினை கலைஞர்களுமே பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாம் மேலும் கூறுகிறார்.

 

எனினும், 1990ம் ஆண்டு முதல் ஏற்பட்டு வந்த பல்வேறு தொந்தரவுகளையும் அவர்கள் கடந்து வருவதால், இந்த சூழலையும் கடந்து, தொழில் நடக்கும் என் மாநில நிர்வாகம் நம்புகிறது. சர்வதேச சந்தையில் காஷ்மீரின் கைவினைப்பொருட்களுக்கு பெரிய சந்தை உள்ளது. ஆனால், ஊரடங்கு இந்த ஆடம்பரமான மற்றும் அலங்காரமான பொருட்களுக்கான தேவைகளை சர்வதேச அளவில் குறைத்தால், இவர்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்படுவது உறுதி என்று அவர் கூறுகிறார்.

குலாம் நம்பிக்கையோடு இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பார்த்தது என்வெனில், பூச்சாடி, சுவற்றில் மாற்றுவது போன்ற பழமையான அலங்காரப்பொருட்களைவிட, தாம்பாளங்கள், பேனா ஸ்டாண்டுகள், போட்டே ப்ரேம்கள் போன்ற பயனுள்ள பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், நாங்கள் இந்த வழியில் இந்த தொழிலை கொண்டு செல்ல முயற்சி செய்தோம், ஆனால், அவற்றை செயல்படுத்த எங்களுக்கு நேரமில்லை. இவர் தற்போது லூடோ, நினைவு விளையாட்டு சாமான்கள் போன்றவற்றை காகிதக்கூழ் கொண்டு செய்துள்ளார். அவற்றை நாங்கள் பெரிய கடைகளில் ஒன்று ரூ.2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை வைத்து விற்றுவிடுவோம். இது ஒன்றை உருவாக்குவதற்கு எனக்கு இரண்டு நாட்கள் போதும். அதை துல்லியமாக செய்வதற்கு பொறுமை இருந்தால் செய்து முடித்துவிடுவேன் என்று அவர் மேலும் கூறுகிறார். அதிக எண்ணிக்கையில் செய்வதற்கு முன்னர் அவற்றிற்கான சந்தை விலையை பரிசோதித்து பார்த்துவிட வேண்டும் என நினைக்கிறார். அதுவரை அவரின் குழந்தைகளோடு விளையாடுவதற்கு அவற்றை பயன்படுத்துவார்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus kashmir jammu and kashmir lockdown papier mache kashmiri artisans handloom weavers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X