ஆன்லைன் வீடியோக்கள் குழந்தைகளுக்கு எவ்வகையில் உதவுகின்றன?
Streaming guide for parents and kids in lockdown : நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து மகிழ்வதற்கு வழிவகுப்பதாக உள்ளது. ஹோம் டான்சர் போன்ற நிகழ்ச்சிகள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் நடன திறனை வளர்த்துக்கொள்வதற்கு உதவியாக உள்ளது.
corona virus, kids, home, video streaming, entertainment, disney hotstat, amazon prime video, streaming guide for parents and kids in lockdown, what to stream for kids, streaming platforms and kids content, parenting, indian express, indian express news
உங்கள் குழந்தைகளை வீட்டில் எப்போதும் எதையாவது செய்துகொண்டிருக்க வைத்திருக்கும் வழிகள் இல்லாமல் திண்டாடுகிறீர்களா? இனி கவலை வேண்டாம். இந்த வீடியோக்கள் ஒரு படி மேலேபோய் உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக உள்ளன. இந்த 5 தளங்களும் புதிய மற்றும் சிறந்த வீடியோக்களை கொண்டுள்ளன. அது உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இணையதளத்தில் பாதுகாப்புடன் உங்கள் குழந்தைகள் இயங்குவதுடன், அவர்களுக்கு புதிய நிறைய வீடியோக்கள் அடங்கிய நூலகமும் உள்ளது. அடுத்த என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்களுக்கு, தேவையானவற்றையும், உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகவும் அவர்கள் செய்து வைத்திருக்கிறார்கள்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வூட் கிட்ஸ் (Voot kids)
கோடை காலத்திற்கு தேவையான சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தேவையான அம்சங்கள் அடங்கியவற்றை வூட் கிட்ஸ் உங்களுக்காக தயாரித்திருக்கிறது. அது நல்ல வேடிக்கை என்ற தலைப்பில், புதிய வீடியோக்களை உருவாக்கி வேடிக்கையான பள்ளி என்பதன் கீழ் வெளியிட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு விருப்பமான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், சோட்டா பீம் போன்ற படங்கள், புதிய வலை புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மோட்டு, பட்டுலு, சிவா மற்றும் ருத்ரா போன்றவர்களை வைத்து 10 நாட்கள் புதிய தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்பைடர்மேன் தொடர்களை வார இறுதிக்காக உருவாக்கியுள்ளது. இலக்கணம் மற்றம் கணித வினாடி வினா கேள்விகளும் வேடிக்கையுடன் பாடம் கற்பிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. பெற்றோரின் கையில் கட்டுப்பாட்டுடன் குழந்தைகள் இவற்றை பார்க்கும்போது அது பாதுகாப்புடன் குழந்தைகள் மகிழ்ச்சியாக உபயேகிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று செயலி மற்றும் அந்த சானலும் கூறுகிறது.
நெட்பிளிக்ஸ் இந்தியாவில் உள்ள நூலகத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் உள்ளன. அது உங்கள் குழந்தைக்கு சிறந்த பொழுதுபோக்காக நிச்சயம் இருக்கும். மோக்லி, ராட்டாடாவ்லி, மடகாஸ்கர் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதை உறுதிப்படுத்தும். பாஸ் பேபி, மாஷா, தி பியர் மற்றும் ரிச்சி ரிச் போன்ற புகழ்பெற்ற குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளும் உள்ளன. அது உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் மகிழ்ச்சியளித்துக்கொண்டே இருக்கும். பாதுகாப்புக்கு என்று தனி எண்(PIN Number) வைத்துக்கொள்ளும் வசதியை நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனமும் வழங்கியுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ இந்தியா
அமேசான் பிரைம் வீடியோவில் உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த அனைத்து தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் இலவசமாகக்கிடைக்கின்றன. அதற்கு நீங்கள் அமேசான் பிரைம் வீடியோவின் உறுப்பினராகக் கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் உங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் அவர்களின் கையில் இருக்கும். தெனாலி ராமன் கதைகள், சக்திவாய்ந்த பெண்கள் போன்ற நிகழ்ச்சிகளை உங்கள் குழந்தைகளுடன் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே பார்த்து மகிழுங்கள்.
சி5 கிட்ஸ்
சி5 அண்மையில் சி5கிட்சை துவங்கியது. குழந்தைகளை எப்போதும் பரபரப்பாகவும், அவர்களுக்கு பொழுதுபோக்காக இருப்பதற்காகவும் துவங்கப்பட்டது. அதுவும் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டிய இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு அவை பயனுள்ளதாவும், பொழுதுபோக்காகவும் இருக்கும் வகையில் துவங்கப்பட்டது. கேட்ஜெட் குரு, கட்டு மற்றும் பாப்பு போன்ற புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அதன் நூலகத்தில் நிகழ்ச்சிகள், படங்கள், ரைம்ஸ் போன்றவற்றை 9 மொழிகளிலும், பல வகைகளில் வைத்துள்ளது. இந்த அனைத்தும் அதன் பயனாளர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
டிஸ்னி+ஹாட்ஸ்டார்
டிஸ்னி+ஹாட்ஸ்டார் குழந்தைகளுக்கு ஒரு மாயாஜலாமான கோடை காலத்தை உருவாக்கியுள்ளது. அதில் புதிய படங்களான அலாதீன், தி லயன் கிங் போன்ற திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. அது உங்கள் குழந்தைகள் மாயாஜலத்தை நம்புவதற்கும், திரையரங்கம் போன்ற உணர்வு கிடைப்பதற்கும் வழிசெய்கிறது. தி சிம்ஸ்சன் போன்ற குடும்பத்தொடர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அது நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து மகிழ்வதற்கு வழிவகுப்பதாக உள்ளது. ஹோம் டான்சர் போன்ற நிகழ்ச்சிகள் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் நடன திறனை வளர்த்துக்கொள்வதற்கு உதவியாக உள்ளது.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil