உணவு தயாரிப்பதற்காக தாஜ் பொதுசேவை நல அறக்கட்டளை அமைப்பு, சஞ்சீவ் கபூர் என்ற சமையல் கலைஞருடன் கைகோர்த்துள்ளது.
கோவிட்-19 நோய் தொற்று பாதிப்பு காரணமாக, இந்தியன் ஹோட்டல் கம்பெனி(IHCL) நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கி வருகின்றது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
2008-ம் ஆண்டு இந்தியன் ஹோட்டல் கம்பெனியை, தாஜ் பொது சேவை நல அறக்கட்டளை உருவாக்கியது. இயற்கை பேரழிவு, செயற்கை பேரழிவு காலகட்டங்களில் பாதிக்கப்படுவோர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக இது தொடங்கப்பட்டது. இப்போது IHCL நிறுவனமும், தாஜ் பொது சேவை நல அறக்கட்டளை, உள்ளூர் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை இணைந்து தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குகின்றன. கடந்த மார்ச் 23-ம் தேதி உணவு வழங்கும் பணி தொடங்கப்பட்டது.இதுவரை 10.65 லட்சம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை, மும்பை, பெங்களூரு, புதுடெல்லி ஆகிய இடங்களில் உள்ள கோவிட் -19 மையங்கள், மருத்துவமனைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள TajSATS-களில் உணவு தயாரிக்கப்படுகின்றது. இந்த உணவு வழங்கும்பணிகள் இப்போது கோவை, ஆக்ரா நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கஸ்தூரிபாய் மருத்துவமனை, கிங்க் எட்வர்ட் நினைவு மருத்துவமனை, லோகமான்யா திலக் மாநகராட்சி மருத்துவக் கல்லூரி, மும்பை, விக்டோபரியா மருத்துவமனை, பழைய நோய் மருத்துவமனை பெங்களூரு, லோக் நாய்க் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரி, ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஜி.பி.பந்த் மருத்துவமனை, குரு தேக் பகதூர் மருத்துவமனை, டெல்லி மற்றும் பல மருத்துவமனைகளுக்கு உணவு வழங்கப்படுகின்றது.
உணவு வழங்குவதற்காக சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூருடன் டாடா நிறுவனம் இணைந்துள்ளது. “கொரோனாவுக்கு எதிராக நாடு போராட்டத்தைத் தொடங்கியிருக்கும் நிலையில் நெருக்கடியின் உண்மையான கதாநாயகர்களாக மருத்துவ சமூகம் முன்னுக்கு வந்துள்ளது. ஊரடங்கின் விளைவாக, IHCL நிறுவனம் டாக்டர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு கொடுக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இப்போது 16 லட்சத்துக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாத த்துக்கு இந்த பணியை மேற்கொள்ள உள்ளோம். மருத்துவப் பணியாளர்களின் கோரிக்கையை அடுத்து இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றோம்.மும்பை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றோம். தாஜ் குழும நிறுவனங்களின் ஆதரவு இல்லாமல் இந்த உதவிகள் சாத்தியப்பட்டிருக்காது. இந்த சேவையைத் தொடந்து வழங்க, டாடா நிறுவனம் மனமுவந்து முன் வந்தது. இந்த சவாலான காலகட்டத்தில் அர்பணிப்பு உணர்வுடனும், தியாக மனப்பான்மையுடனும் மருத்துவ சமூகத்துக்கு நாம் ஆழ்ந்த நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்,” என்றார் IHCL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் மேலாண்மை இயக்குநருமான புனீத் சாத்வால்.
IHCL நிறுவனத்தின் நாடு முழுவதும் உள்ள 11 ஹோட்டல்களில் மருத்துவ சகோதர்களுக்கு அறைகள் வழங்கப்பட்டுள்ளன. தாஜ் லேண்ட்ஸ் என்ட், தாஜ் சான்டா குரூஸ், த பிரசிட ண்ட் மற்றும் ஜிஞ்சர் அந்தேரி மேற்கு, மும்பை, ஜிஞ்சர் மட்கான், ஜிஞ்சர் சிட்டி சென்டர், நொய்டா, ஜிஞ்சர் புதுடெல்லி ரயில் யாத்ரி நிவாஸ், ஜிஞ்சர் கலிங்கநகர், ஜிஞ்சர் மானேசார், ஜிஞ்சர் சூரத், விவாண்டா குவஹாத்தி கூடுதலாக, 38 IHCL பிராண்ட் ஹோட்டல்கள் விமானத்தில் செல்ல வேண்டியவர்களை தனிமைப்படுத்துதல் செயல்பாடுகளுக்காகப்பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil