ஆரோக்கிய வாழ்வுக்கான சமையலறை அடிப்படைகளை இந்த ஊரடங்கு நாட்களில் கற்றுக்கொள்ளுங்கள்

கார்போஹைட்ரேட் உணவு வகைகள் பசியில் இன்சுலின் அளவை பாதிக்கும். மேலும், அது சர்க்கரை அளவை சரிசெய்யும், ஆனாலும் இனிப்பு சுவையையும் பராமரிக்கும்.

By: May 3, 2020, 1:08:35 PM

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது உங்கள் உடல் நலனுக்கும், மன நலனுக்கும் நல்லது. உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவு குறித்து நீங்களே ஆராய்ச்சி செய்து, உங்களுக்கு புரதங்களையும், ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் வழங்கக்கூடிய சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த ஊரடங்கு மற்றும் தனிமை நாம் மறந்திருந்த நமது உபயோகமான பொழுதுபோக்குகளை மீண்டும் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. மக்கள் உடற்பயிற்சி, வரைவது, நடனம், சமையல், புத்தக வாசிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றனர். இதில் சமையல் என்பது ஒரு சிகிச்சை முறை என்று நம்பப்படுகிறது. மனதின் காயங்களை ஆறச்செய்வதற்கும், பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் ஒரு அமைதி நிலவுவதற்கும் அது உதவுகிறது. பாலிவுட் பிரபலங்களுக்கு நன்றி, அவர்களின் செய்துகாட்டும் பல்வேறு சுவாரஸ்யமான உணவு வகைகள் சமூக வலைதளங்களில் விரவிக்கிடக்கின்றன. அதை நீங்களும் செய்து பார்க்கலாம். நீங்களும் வீட்டிலே முடங்கிக்கிடப்பது போல் உணர்ந்தால், வேலையை துவங்குவதற்கு உதவும் வகையில் இதோ உங்களுக்கு சில குறிப்புகள்:

குழந்தைகள் நடப்பதுபோல் மெல்ல மெல்ல துவங்குங்கள்

வீட்டிலிருந்து பணி செய்வது சவாலான ஒன்றுதான். ஒவ்வொருவரையும் பணி செய்யும்போது உற்சாகப்படுத்துவதற்கும் ஒரு ஆள் தேவை இருக்கிறது. உங்களின் நாளை எலுமிச்சை பழச்சாறு அருந்தி துவங்குங்கள், அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. அது உணவு அதிகம் எடுத்துக்கொள்வதற்கும், உணவை செரிக்க வைப்பதற்கும் உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதில் உள்ள கூடுதல் நன்மை என்னவெனில், அதை செய்வது சுலபம் என்று ஊட்டச்சத்து நிபுணர் ரித்திகா சமதார் கூறுகிறார்.

ஆரோக்கியமான உணவு வகைகளை பட்டியலிடுங்கள்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது உங்கள் உடல் நலனுக்கும், மன நலனுக்கும் நல்லது. உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவு குறித்து நீங்களே ஆராய்ச்சி செய்து, உங்களுக்கு புரதங்களையும், ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவில் வழங்கக்கூடிய சிறந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். அந்த உணவுகளை உங்கள் உணவுப்பட்டியலில் சேர்த்து, அதை செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும் உங்கள் வீட்டில் உள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களின் தனிப்பட்ட செய்முறை மூலம் அதன் சுவையை கூட்டுங்கள் அல்லது புதியதை செய்வதற்கு திட்டமிடுங்கள்.

ஒரு முழுமையான காலை உணவுடன் அந்த நாளை வரவேற்க தயாராகுங்கள்

உங்களின் வேலைப்பளு காரணமாக அண்மையில் சமையல் செய்வதையே மறந்துவிட்டீர்களா? நல்லது. உங்கள் சமையல் திறனை மீண்டும் வளர்த்துக்கொள்வதற்கு இது உங்களுக்கு சிறந்த நேரம். ஒரு ஆரோக்கியமான காலை உணவை தயாரித்து உங்கள் நாளை துவங்குங்கள். அதில் தேவையான அளவு புரதங்களும் இருக்கட்டும். எடுத்துக்காட்டாக ஒரு கோப்பை பால், முட்டை, ஆம்லேட், முட்டை அடை போன்ற உணவாக இருந்தால் சிறப்பு. அது வயிற்றை நிரப்பும் மற்றும் அந்த நாள் முழுவதும் உங்களின் உடல் சக்தியை பராமரிக்க உதவும். ஆரோக்கியமான காலை உணவு, அந்த நாளை இனிமையாக துவக்குவதற்கு உதவும்.

ஆரோக்கியமான நொறுக்கு தீனி வகைகள்

நீங்கள் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, ஏதையாவது மென்றுகொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினால், அது பழங்களாகவோ அல்லது முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளாகவோ இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் சிறப்பாக பணியாற்ற பாதாம் சிறந்த உணவு, அதில் 15 வகை ஊட்டச்சத்து உள்ளது. வைட்டமின் ஈ, ரிபோப்ளாவின், மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உங்கள் உடலுக்கு சக்தியளிப்பதுடன், உடலின் தசை வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் உதவுகின்றன. இந்திய உணவுகளின் சுவையை கூட்டுவதற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது பாதாமை வீட்டிலேயே வறுத்து, ஆரோக்கியமான, சுவையான நொருக்குத்தீனியாக செய்துகொள்ளலாம். இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கும் என்று ரித்திகா கூறுகிறார்.

உங்கள் அழகான பற்களுக்கு விருந்து கொடுங்கள்

உங்கள் வாழ்விற்கு இனிப்பின் வண்ணம் கூட்டுவது பாதாம் அல்வாவா அல்லது கேக்கா? எதுவாக இருப்பினும், அது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு பாதாம், வெண்ணெய், சர்க்கரை, குங்குமப்பூ சிறிதளவு தேவைப்படும். பாதாம் ரத்த சர்க்கரையை குறைக்க உதவும். கார்போஹைட்ரேட் உணவு வகைகள் பசியில் இன்சுலின் அளவை பாதிக்கும். மேலும், அது சர்க்கரை அளவை சரிசெய்யும், ஆனாலும் இனிப்பு சுவையையும் பராமரிக்கும்.
இதுபோன்ற ஆரோக்கியமான உணவு வகைகளை தயாரிப்பதன் மூலம் நீங்கள் உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், உங்களின் சமையல் திறனையும் மீண்டும் வளர்த்துக்கொள்ளலாம். மேலும், நன்றாக உணவு உண்டு, தினமும் உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை நன்றாக தண்ணீரில் கழுவி சமைக்க பயன்படுத்துங்கள். சமைப்பதற்கு முன்னரும் உங்கள் கைகளை நன்றாக கழுவுங்கள். உணவு உட்கொள்ளும் முன்னரும், பின்னரும் உங்கள் கைகளை நன்றாக கழுவி ஆரோக்கியமாக வாழுங்கள்.

தமிழில்: R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown covid19 simple ways cooking cooking tips how to cook at home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X