ஊரடங்கு நாட்களில் விர்சுவல் டேட்டிங் செய்யும் இந்திய இளம்தலைமுறை

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருவதால், நாம் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறோம். அது இன்றைய தலைமுறையினரிடையே விர்சுவல் டேட்டிங்கை அதிகரித்துள்ளது.

By: April 19, 2020, 3:08:25 PM

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருவதால், நாம் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறோம். அது இன்றைய தலைமுறையினரிடையே விர்சுவல் டேட்டிங்கை அதிகரித்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கோவிட் – 19 காலங்களில் எதிர்பாலினத்தினருடன் டேட்டிங் செல்ல முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருவதால், நாம் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறோம். அது இன்றைய தலைமுறையினரிடையே விர்சுவல் டேட்டிங்கை அதிகரித்துள்ளது.
இளந்தலைமுறையினர், விர்சுவல் டேட்டிங்க் ஆதரவாளர்கள். 41க்கும் மேற்பட்ட சதவீதத்தினர், இரவு உணவு மற்றும் மது அருந்துவதற்கு சரியான விர்சுவல் டேட்டிங்கை தேர்ந்தெடுக்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. எனினும் 22 சதவீதம் பேர் சேர்ந்து சினிமா பார்ப்பது அல்லது டிவி பார்ப்பதையே விரும்புகின்றனர். கொரோனா வைரஸ் டேட்டிங்கிற்கும் தடை விதித்துள்ள நிலையில், இந்திய இளந்தலைமுறையினர் டேட்டிங்கிற்கு வேறு வழியை தேர்தெடுத்துள்ளனர். விர்சுவல் டேட்டிங் மூலம், அவர்களுக்கு, தங்களின் துணை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடிகிறது என்று ஆய்வு கூறுகிறது. முன்பிருந்ததைவிட, அவர்களுக்கு அதிக நேரம் இருப்பதாகவும் கூறுகிறது. டேட்டிங் செல்வதற்கு தயாராகும் சிரமத்தையும் குறைக்கிறது. வீட்டில் இருத்தபடியே பைஜாமா அணிந்துகொண்டே விர்சுவல் டேட்டிங்குகள் எளிதாக முடிந்துவிடுகின்றன. அவர்களுக்கு வெளியில் செல்லும்போது பிரத்யேகமாக தயாராகும் சிரமத்தையும் குறைத்துள்ளது.

ஒகேகியூபிட்டால், செய்யப்பட்ட டேட்டிங் ஆப் ஆய்வை பொறுத்தவரையில், உலகம் முழுவதிலும் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள், தொற்றுநோய் பரவி வருவதால், தங்கள் டேட்டிங் நேரலையை சரிசெய்து வருகின்றனர். இந்த மார்ச் மாதம் முதல் டேட்டிங் ஆப்கள் மூலம் சேர்வது உலகம் முழுவதும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் உரையாடலும் 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மெதுவான டேட்டிங் என்ற புதிய காலத்தின் விர்சுவல் டேட்டிங்கை தனியாக இருப்பவர்கள் வரவேற்கின்றனர். 85 சதவீத பயனாளர்கள் உடலளவில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னர், உணர்வு ரீதியான தொடர்பை வளப்படுத்திக்கொள்வது மிகமிக அவசியம் என்று நம்புகின்றனர். அதற்கு இந்த விர்சுவல் டேட்டிங்குகள் வெகுவாக உதவுகின்றன. அதனால் அவர்கள் விர்சுவல் டேட்டிங் செய்ய நினைக்கின்றனர். உரையாடலின் தரம் மற்றும் சேர்ந்து செலிட்ட நேரம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விர்சுவல் டேட்டிங்குகள் உதவுகின்றன. இதனால், நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நபர் உங்களுக்கு ஏற்றவரா என்பதை நீங்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும். விர்சுவல் டேட்டிங்கிற்காக திட்டமிடும்போது, ஆண், பெண் இருவரும் அவர்களின் செயல்கள், இரவு உணவு, மது ஆகியவற்றை பகிர்ந்துகொள்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வில் பங்கேற்ற 91 சதவீத இந்தியர்கள் விர்சுவல் டேட்டிங்கை தொடர்ந்து செய்ய உள்ளதாக கூறியதாக ஆய்வு தெரிவிக்கிறது. விர்சுவல் டேட்டிங் செய்வதற்கு இந்தியாவில், குறுஞ்செய்தி அல்லது குறுந்தகவல் அனுப்பும் முறையே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. 33 சதவீத ஆண்களும்,42 சதவீத பெண்களும் பேசுவதையே விரும்புகின்றனர். 32 சதவீத ஆண்களும், 13 சதவீத பெண்களும் வீடியோவில் பேசுவதை விரும்புவதாக ஆய்வு தெரிவிக்கிறது. 27 சதவீத ஆண்களும், 21 சதவீத பெண்களும், பழைய முறையான போனில் பேசுவதையே விரும்புகின்றனர். அவர்கள் குறுஞ்செய்தி அனுப்புவதையோ அல்லது வீடியோ அழைப்புகளில் பேசுவதையோ விரும்பவில்லை என்று ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. ஆனாலும் சிலர் தங்கள் டேட்டிங் விளையாட்டுக்களை தொடர்வதற்கு தொற்றுநோய் முடிந்து, ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள்.

தமிழில் : R.பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown dating dating coronavirus covid 19 dating online dating india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X