உங்கள் குழந்தைகளுடன் விளையாடுதல் மற்றும் கற்றுக்கொள்ளுதல் என்பது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். உங்கள் குழந்தை உங்களிடம் பேசுவதற்கும் விளையாடுவதற்கும் ஆர்வமாக இருப்பதையும் நீங்கள்கண்டுபிடிக்கலாம்.
சுவாதி சாவ்னி
கோவிட்-19 தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறதோ அல்லது இல்லையோ, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதுதான் முக்கியமானது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல் என்பது அவர்களுக்கு அவர்களுடைய வீட்டுப் பாடத்துக்கு உதவி செய்வது என்பது மட்டுமல்ல அல்லது அவர்களது வேலைகளை செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதும் அல்ல. நீங்கள் அவர்களுடன் இணைந்திருக்கும்போது அது இன்னும் ஒரு எளிதான வேடிக்கையாக இருக்கும். மேலும் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அனுபவித்து விளையாடும்போது மேலும் அதிகமாக அவர்கள் கற்றுக்கொள்ள முடியும். தொடக்க காலத்திலேயே பல திறமைகளை உங்கள் குழந்தைகள் கற்கும் திறன் பெற்றால், அவர்களின் வளர்ச்சி நிலைகளை மற்றும் ஆர்வங்களைச் சார்ந்து அவர்கள் இருப்பார்கள். தவிர அவர்களின் கற்றல் என்பது, குடும்பத்தினர் மற்றும் அவர்களை சுற்றியிருப்போர் அவர்களுக்கு வீட்டில் வழங்கும் ஆதரவு மற்றும் வாய்ப்புகளைச் சார்ந்து இருக்கும்.
குழந்தைகள் எல்லா நேரமும் குறிப்பாக விளையாடும் போது கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகளின் கற்றல் என்பது வேடிக்கையானது. உங்கள் குழந்தைகளுடன் கற்றுக் கொள்வதும் விளையாடுவதும் உங்களுக்கும் வேடிக்கையாக இருக்கும். உங்கள் குழந்தைகள் உங்களிடம் பேசவும், உங்களுடன் விளையாடவும் விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம்.
சிறிய விஷயங்களை செய்யும்போது, அவை பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் பிணைப்புடன் இருப்பதற்கும் குடும்பத்தின் பிணைப்பை வலுப்படுத்தவும் உதவியாக இருக்கும். கீழ்குறிப்பிட்ட பல செயல்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
1.சமையல் செய்தல்
சமையல் அறையில் நீங்கள் அவர்களுக்காக சமைக்கும்போது அல்லது உணவுகளை சூடுபடுத்தும்போது உங்கள் குழந்தைகளை உங்களுக்கு உதவ அனுமதியுங்கள். இது அவனுக்கு அல்லது அவளுக்கு ஒரு தொந்தரவாகக் கூட இருக்கலாம். ஆனால், உங்களுக்கு அவர்கள் எப்படி உதவி செய்வது என்பதை எப்போது தொடங்க வேண்டும் என்று சொல்லப்படாமலேயே அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி சமைப்பது மற்றும் சூடுபடுத்துவது என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையலாம். பல குழந்தைகள் இன்னும் விளையாட்டுகளில் ஈடுபடுவது அல்லது டிவி பார்ப்பதில் இன்னும் முதன்மையாக ஈடுபடும்போது, குடும்பமாகச் சமையல் செய்வது மற்றும இணைந்து தயாரித்த உணவை உட்கொள்வது, வாழ்க்கையின் பின்னர் வரும் காலகட்டத்தில் குழந்தைகள் குடும்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்கான அடிப்படைப் பணிக்கான அடித்தளமாகும்.
2. நாற்று நடுதல் மற்றும் தோட்டவேலை
நீங்கள் தோட்ட வேலையில் ஈடுபடும்போது, செடிகளுக்கு எப்படித் தண்ணீர் ஊற்றுவது என்று குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள். பின்னர், செடிகள் வளர்ப்பதற்கான சில விதைகளைக் கொடுங்கள். அந்த செடி வளர்வதை உங்கள் குழந்தைகள் கவனித்துக் கொள்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள். அவர்களுடன் தோட்ட வேலைகளை விருப்பத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுப்பதற்கான சிறந்த வழியாகும். தோட்டவேலை செயல்பாடு என்பது பெரும் முயற்சியும் திட்டமிடலும் தேவைப்படுவதாகும். நீங்கள் ஒரு குடும்பமாக ஒருவருக்கு ஒருவர் இணைந்து இந்த வேலையைச் செய்யத் தொடங்கும்போது, நீங்கள் உண்மையான மற்றும் தரமான வகையில் நேரத்தை செலவிடலாம். நீங்கள் தோட்ட வேலையில் ஈடுபடும்போது, சில அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கும் அது சிறந்த வழியை கொடுக்கிறது. கொஞ்சம் மன அமைதியையும் அனுபவிக்க முடியும். இயற்கை உலகைப் பற்றியும் மற்றும் தாவரங்களின் வாழ்க்கையைப் பற்றியும் மேலும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுத்தருவதற்கான அருமையான நேரமாகும்.
3. விளையாட்டுகளில் ஈடுபடுதல்
விளையாடுவது என்பது வேடிக்கையானது மட்டுமல்ல. குழந்தைகள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கும், தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமாக ஒருவருக்கு ஒருவர் உறவுகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இது உதவும். உங்களுடைய சொந்த சமூக அனுவபத்தை விரிவாக்கிக் கொள்ள ஏன் சில விளையாட்டுகளை உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தைகள் வீடியோ விளையாட்டுகளில் மற்றும் ஐபேட்களில் மூழ்கியிருப்பதைத் தவிர்க்க உங்களுடன் அவர்களை நேரம் செலவழிக்கும்படி சொல்லலாம். அதே போல ஒட்டு மொத்த குடும்பத்துக்கும் நல்லதாக இருக்கும். அவர்களோடு இணைந்து விளையாடுவது நல்லநினைவுகளை வளர்த்தெடுக்கும். வெளி இட விளையாட்டுகள் நல்லமுறையில் கைகள், கண்கள் ஒருங்கிணைந்து செயல் பட உதவும் , மன அழுத்தம் குறையும், உங்கள் தசைகளைத் தளர்த்தும், உங்கள் மூச்சு சீராக உதவும், ரத்த ஓட்டத்தை சீராக்கும், தலைவலி, சோர்வு போன்ற உடல் சார்ந்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
4. இரவு சினிமா
வார இறுதியில் உங்கள் குடும்பத்தினருடன் திரைப்படங்கள் பார்ப்பது அவர்களுடன் இணைந்து நேரம் செலவிடுவதற்கு சிறந்ததாகும். நீங்கள் சிறிய குடும்பமாக அல்லது பெரிய குடும்ப அமைப்பு முறையில் இருந்தாலும் கூட, உங்களுப் பிடித்த திரைப்படத்தைப் பார்க்க அரவணைத்து செல்வதை விடவும் வேறு ஒன்றும் சிறந்ததில்லை. இது தவிர, உங்கள் குடும்பத்துடன், திரைப்படங்கள் பார்ப்பது என்பது எளிமையான , மலிவான பொழுதுபோக்கு செயல்பாடாக இருக்கும். குடும்பத்துடன் இரவு நேரங்களில் சினிமாவுக்குச் செல்வது குடும்ப உறுப்பினர்களுக்குள் வெறுமனே பிணைப்பு ஏற்படுவதைவிடவும் அதிக நன்மைகளைக் கொண்டதாகும். குழந்தைகள் திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சிகளை பெற்றோருடன் இணைந்து பார்ப்பது என்பது இந்த உலகில் சரி எது தவறு என்பதை அறியும் மதிப்புமிக்க நுண்ணறிவை அவர்கள் பெற முடியும்.
5. இணைந்து படித்தல்
ஒவ்வொரு நாளும் படிப்பது அல்லது கற்றல் செயல்பாட்டை குடும்பமாக மேற்கொள்ளும்போது உங்கள் குழந்தையின் கற்றல் திறன் வளர்ச்சி பெறும். உங்களுக்கும் கூட வளர்ச்சி பெறும். வேடிக்கையாகப் படிப்பதை ஊக்குவிப்பதில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். உங்களுடைய படிக்கும் பழக்கம் உங்கள் குழந்தையின் செயல்பாடுகளில் படிப்பை நோக்கி எடுத்துச் செல்ல எதிர்கால பழக்க வழக்கங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இணைந்து புத்தகங்கள் படிப்பது என்பது குடும்பத்தின் விவாதத்துக்கும் வாய்ப்பாக அமையும். பெற்றோர் பாடங்கள் கற்றுக் கொடுப்பதற்கும் குடும்பத்தின் மதிப்பீடுகள் குறித்து விவாதிப்பதற்கும் புத்தகங்கள் தனிதன்மை வாய்ந்த வாய்ப்பை உருவாக்கும்.
கையில் உள்ள செயல்பாடுகளைக் கொண்டு உங்களின் பெரும்பாலான குடும்ப நேரத்தை ஒவ்வொருவரும் அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் இருந்து தேர்வு செய்ய ஏராளமான நடவடிக்கைள் உள்ளன. அதில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, உங்கள் குடும்பத்துக்கும் அவர்களின் குறிப்பிட்ட ஆர்வத்துக்கும் தகுந்தவாறு கொடுங்கள்.
(இந்த கட்டுரையின் எழுத்தாளர், த சென்டர் ஆஃப் ஹீலிங் அமைப்பின் நிறுவனர்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.