பெற்றோர்கள் திடீரென இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்கின்றனர். வீட்டில் இருந்து அவர்கள் அலுவலக வேலைகளைப் பார்க்க வேண்டும். அதே போல வீட்டின் அன்றாட பணிகளையும் பார்க்க வேண்டும். இது தவிர, குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் உதவ வேண்டும்.
அச்சின் பட்டாச்சார்யா
இப்போதைய சூழலில் நாம் போகும் வழி, நிச்சயாக ஒரு மோசமான சூழலை கொண்டதாக மனிதர்கள் ஒரு போதும் போகாத வழியாக இருக்கிறது. நமது வாழ்நாளில் இதுவரை கண்டிராத மோசமான சூழலாகவும், இப்போது நாம் அதற்கு சாட்சியாக இருக்கின்றோம். உலகத்தை சுற்றியுள்ள ஒவ்வொரு முக்கியமான வாழ்விடமும் அது சமூக பொருளாதாரமாக இருக்கட்டும், நவீன சுகாதார வசதிகளின் தேவைகள் ஆகட்டும் எல்லாமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பக் கூடிய சூழல் என்று எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு அரசு முகமைகள் என முன்னணியில் அவர்கள், நம்மை பாதுகாக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
பள்ளிகள் நீண்டநாட்களாக மூடப்பட்டுள்ளன. ஆனால், பள்ளிப்படிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கல்விக்காக குழந்தைகள் பயணம் செய்ய முடியாத சூழலில், கல்வியானது மிகப்பெரிய வழியில் அவர்களின் வீடு தேடி வந்திருக்கிறது. டிஜிட்டல் கல்வி என்பது கரும்பலகையை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைக்குத் துணையாக சில காலம் நம்மிடம் இருக்கப் போகிறது. திடீரென இது ஒரு புதிய இயல்பாகி விட்டது. பெற்றோர்கள் திடீரென இது போன்ற ஒரு சூழலை எதிர்கொள்கின்றனர். வீட்டில் இருந்து அவர்கள் அலுவலக வேலைகளைப் பார்க்க வேண்டும். அதே போல வீட்டின் அன்றாட பணிகளையும் பார்க்க வேண்டும். இது தவிர, குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் உதவ வேண்டும்.
எனினும், இந்த எல்லா பிரச்னைகளுக்கும் இடையேயும், நேரத்தைப் பொறுத்தவரை, பெற்றோர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியும் என்பதுதான் இதில் உள்ள சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்கள் படிப்பில், தினந்தோறும் சந்திக்கும் சவால்களை அவர்கள் மேலும் தெரிந்து கொள்ள முடிகிறது. கல்வியாளர்கள் என்ற பாத்திரத்தையும் பெற்றோர் வகிக்க வேண்டி இருக்கிறது. ஆன்லைன் கற்றலுக்கு வெற்றிகரமாக வழிகாட்டுதல் என்பது இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி உகந்த பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டிய வகையில் இருக்க வேண்டியது முக்கியம்.
இங்கே அதற்கான சில குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.
கருத்தியல் தெளிவை உறுதி செய்ய பொறுமை மிகவும் முக்கியமானது.
முன்னோக்கி செல்லும் சாலை சீராக இருப்பதற்கு, குறிப்பிட்ட தலைப்பின் கருத்தியல் தெளிவை நீங்கள் உறுதி செய்த வேண்டும்.. அடிப்படைத் தெளிவைப் பெறுவதற்கு, போதுமான நேரத்தை அர்ப்பணிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். யாராவது ஒரு சகாவின் அழுத்தம் வகுப்பறையில் உங்களை கவனப்படுத்தும் வகையில் இருக்கும். பெண் அல்லது ஆண் குழந்தை தங்களின் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்வதை தடுப்பதாகவும் இருக்கும். எனினும், ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்த கற்றல் நிலையைக் கொண்டிருக்கின்றன. ஆன்லைன் டிஜிட்டல் தளத்தில், குறிப்பிட்ட பொருள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வதற்கு, இன்னும் முழுமையான கருத்தியல் தெளிவு பெற அதிக நேரம் செலவிடுவதற்கான வழிகள் இருக்கின்றன. டிஜிட்டல் இணையதளங்களில் ஏதாவது ஒன்றை உருவாக்க அடிப்படை விஷயங்கள் ஒன்றாக இணைக்கப்படுவதற்கான நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. முக்கியமான மையக்கருத்தியலில் மாணவர்கள் திறன் கொண்டிருக்க வேண்டும் என்பதை நோக்கமாக்க் கொண்டிருக்கின்றன. எனவே, சுய கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவும். அடிப்படைக் கருத்தியலில் குழந்தைகள் பணியாற்ற அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும். பெற்றோரின் பங்கு என்பது இதில் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
ஈடுபாட்டுடன் அனுபவிப்பதை உருவாக்குங்கள்
வகுப்பறையில் கரும்பலகை மூலம் கற்பிக்கப்படும் அனுபவத்தை விடவும், வரைபடங்கள், இசை, அனிமேஷன் உள்ளிட்ட ஒலி, ஒளி வடிவங்களைப் பரந்த அளவில் உபயோகிப்பதால் டிஜிட்டல் உள்ளடக்க கற்பித்தல் என்பது கூடுதல் அனுபவம் கொண்டதாக இருக்கும்.
எனினும், அதில் ஏகபோகத்தையும், சலிப்பையும் ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் பெற்றோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கிறது. ஆர்வத்தின் அளவு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு பாடங்கள் மற்றும் கருத்துகளுக்கு இடையே மறு சீரமைப்பு மேற்கொள்ளவும். குறிப்பிட்ட ஒரு பாடம் அல்லது ஒரு பொருள் குறித்து தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால், உங்கள் குழந்தைக்கு அது ஒவ்வாமையாகிவிடும். மேலும், எந்த ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து வேண்டுமானாலும் இருக்கக் கூடிய ஆர்வத்தைக் கட்டமைக்கும் வீடியோக்களை காண்பித்து, குறிப்பிட்ட பொருளில் ஆர்வத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தவும்.
கடந்த சில மாதங்களாக குறிப்பிட்ட பொருள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையிலான ஆர்வத்தை கட்டமைப்பது குறித்த ஆயிரகணக்கான கேள்விகள் மற்றும் பின்னூட்டங்களை பெற்றோர்களிடம் இருந்து நாங்கள் பெற்றிருக்கின்றோம். குறிப்பிட்ட மாணவன், ஒரு குறிப்பிட்ட பொருளில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது என்றால், பெற்றோர்களின் வேலை என்பது மிகவும் சுலபமாகி விடும்.
எடுத்துக் கொள்வதில் மற்றும் பயிற்சிகளில் கவனம் செலுத்தவும்
எத்தனை மணி நேரம் செலவழித்தோம் என்பது அல்ல விஷயம்.குறிப்பிட்ட பாடத்தில் இருந்து என்ன எடுத்துக் கொண்டோம் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. எனவே உள்ளடக்கத்தை மறுபடியும் நினைவில் கொள்வதற்கான பிரிவுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானதாகும். நீங்கள் உங்கள் பள்ளி வகுப்பறையில் இருந்தாலும் அல்லது வீட்டில் டிஜிட்டல் வழியே படித்தாலும் கற்பதில் உள்ள அடிப்படை விஷயங்களில் இருந்து ஒருபோதும் மாறக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தில் இருந்து என்ன நீங்கள் கற்றுக் கொண்டீர்கள் என்பதில் கவனம் செலுத்த தயவு செய்து குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதன் முக்கியத்துவம் என்பது தேர்வுகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. குறிப்பிட்ட பொருளில் நாம் படிக்கும்போது சில முக்கியமான விஷயங்களில் நாம் இயல்பாகவே கவனம் செலுத்துவோம். நல்ல ஒரு ஆசிரியரின் வேலை என்பது அனுபவத்தை மேம்படுத்துவதாகவும், சரியான பகுதிகளில் கவனம் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறையாக இருந்தாலும் அல்லது ஆன்லைன் ஆக இருந்தாலும் அடிப்படையான கல்வி ஒருபோதும் மாறக் கூடாது. குழந்தைகள் அவர்களது சொந்த மொழியில் போதுமான அளவுக்குக் குறிப்புகள் எடுத்துக்கொண்டார்களா என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் நினைவில் கொள்வதற்கு உதவும் செயலாகவும் இருக்கும்.
பெரும்பாலான டிஜிட்டல் உள்ளடக்கங்கள் கூர்மையாக செம்மைப் படுத்தப்பட்டுள்ளன. பெரிய அளவிலான முன்னோக்கில் இருந்து அனைத்து விஷயங்களையும் கொண்டதாக, உங்கள் குழந்தைகள் மிகவும் எளிதாக அதனைப் பற்றி புரிந்து கொள்ளும் படி இருக்கின்றன. யார் ஒருவராலும் குழந்தைகள் குறித்து தீர்மானிக்க முடியாத முகமற்ற சூழலை பயிற்சி செய்யும் வகையிலான வாய்ப்பை ஆன்லைன் தளங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கின்றன. உங்களோடு நீங்கள் மட்டுமே போட்டி போடக் கூடிய அற்புதமான ஒன்றாக இது இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உங்களை முன்னேற்றிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த செயல்பாட்டில், உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நெருங்கிப் பழகும்போது, உங்கள் குழந்தையின் திறன் பற்றியும், அவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டிய தேவைகள் குறித்தும் நீங்கள் தெரிந்து கொண்டு அதற்காக நீங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட முடியும். எந்த ஒரு நல்ல சுயமான படிப்பு தளங்களின் நோக்கம் என்பதும், தியானம் செய்வது போன்று உங்களைத் தெரிந்து கொள்வதற்கான ஆழமான அனுபவத்தை வழங்குகின்றன.
உள்ளடக்க வெளியில் கவனமாக இருக்கவும்
பாடத்துக்குப் பொருத்தமான உள்ளடக்கமாக இல்லாதவரையில் தனிப்பட்ட வயது சார்ந்த மாணவர்கள் குழுக்களுக்கு அது எப்போதுமே அபாயமானதாகவே இருக்கும். பத்தாம் வகுப்பில் இருந்து பட்ட மேற்படிப்பு வரை ஜூலியஸ் சீசர் குறித்து பல்வேறு மட்டங்களில் கற்றுத்தரப்படுகிறது. இயல்பாகவே ஆழமாக விஷயத்தை புரிந்து கொள்ளும் நிலை மற்றும் பாடம் அளவுக்கு மட்டும் அந்த விஷயத்தைக் கற்பிக்கும் நோக்கம் என இரண்டும் வேறு படலாம்.
இணைய வெளியில் எந்தொரு நபராலும், எந்த ஒரு இடத்தில் இருந்தும் பல்வேறு வகையான உள்ளடங்கங்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்பதால், உங்கள் குழந்தைகள் கட்டுப்பாடு இன்றி அதை அணுகும் வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த ஒரு திறந்த வெளி உள்ளடக்க தளத்தையும் உங்கள் குழந்தை படிக்க நேரும்போது பெற்றோர் கண்காணிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். உங்கள் குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நம்பகமான கல்வி தொழில்நுட்பத் தளங்களை தனிப்பயனாக்கப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட தளங்களுக்கு செல்ல மட்டும் உங்கள் குழந்தைகளை அனுமதிக்கவும். வயது, மன ரீதியான முதிர்ச்சி, பாடங்களுக்கான தேவை உள்ளிட்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டும் இதில் முடிவு எடுக்க வேண்டும்.
மகிழ்ச்சியாக இருங்கள்
இப்போதைய சூழல் பல்வேறு வாழ்கை முறை மாற்றங்களை தன்னிச்சையாக கொண்டு வந்துள்ளது. எனினும், உங்கள் குழந்தைகளுடன் இணைந்து படிக்கும்போது மகிழ்ச்சியான நிலையை தக்கவைத்திருப்பது முக்கியமானதாகும். சாதகமான அணுகுமுறையும் கொண்டிருங்கள். இப்போதைய சிக்கலான சூழலில் வேடிக்கை நிறைந்த வெளி இட செயல்பாடுகளில் பங்கேற்பது, நண்பர்களை சந்திப்பது, பள்ளிக்கு செல்வது போன்ற பழைய முறையிலான வாழ்க்கை முறைகளை உங்கள் குழந்தைகள் இழந்திருக்கின்றன. எனவே, மகிழ்ச்சியான சூழல் என்பது உங்கள் குழந்தைகள் அந்த இழப்புகளில் இருந்து மீண்டு வர உதவும்.
அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். சில மாதங்கள் வரை கூட நினைத்துக் கூட பார்க்க முடியாத ஏதோ ஒன்றாக இருந்த, அவர்களுடைய படிப்பில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். எனினும், அவர்களின் சிறிய உலகத்தில் உங்களுடைய ஈடுபாடு என்பது, அவர்களுடன் இணைந்து சவால்களை எதிர்கொள்ள வழிகாட்ட உதவுவது அவர்கள் விரைவாக முன்னேறி செல்வதற்கும் அவர்களின் நம்பிக்கைக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருக்கும். வாழ்க்கை முழுவதற்குமான நினைவுகளையும் அது உருவாக்கும்.
(இந்த கட்டுரையின் எழுத்தாளர் நோட்புக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.