corona virus, lockdown, romantic, love story, virtual dating, relationship love story, indian millennials couple, indian millennials romantic story, indian express news
ஊரடங்கு காரணமாக அர்த்தமுள்ள உறவுகளை தேடுவதை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. உலகின் பெரும்பகுதி மக்கள் தொகை தனிமையில் , சமூக விலகலைக் கடைபிடித்துக்கொண்டிருக்கும் வேளையில், தனிமையில் இருக்கும் தனி மனிதர்கள் , தங்கள் வீடுகளில் இருந்தபடியே பாதுகாப்புடன் ஆன்லைனில் டேட்டிங் செய்வது அதிகரித்திருக்கிறது. இந்த தலைமுறையினர் காதல் உறவை வளர்த்துக் கொள்வதை மறுபடி கண்டைவதில் முன்னணியில் இருக்கின்றனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
ஊரடங்கு காலத்திலும் கூட உங்கள் டேட்டிங் வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான குறிப்புகள் மற்றும் உத்திகள்
நீங்கள் நீங்களாக இருங்கள்
தொடர்புகள் என்பது நீண்ட உரையாடலை நோக்கிச் செல்ல, அழைப்புகள், வீடியோ அழைப்புகளில் டேட்டிங் தொடர நீங்கள் நீங்களாவே இருப்பதை உறுதி செய்யுங்கள். ஒரு நாளின் முடிவில், உங்களை விரும்பும் யாரோ ஒருவரை சந்திகவும், நீங்கள் யார் என்பதற்கும் தகுதி உடையவராக இருங்கள். இல்லாத ஒருவராக நீங்கள் பாசாங்கு செய்வது, அந்த நபரை சந்திப்பது என்று நீங்கள் உண்மையில் எதிர்பார்த்திருந்தால், உங்களுடைய டேட்டிங் சூழ்நிலையை சிக்கலாக்கும்.
டேட்டிங் இரவுக்காக உடையணியுங்கள்
டேட்டிங் இரவு என்பது சிறப்பு வாய்ந்தது. உங்கள் உடையில் அதை எதிரொலிக்கச் செய்யுங்கள். அதே போல, உங்களுக்கு பொருத்தமானவரும் சிறந்த ஒன்றை அணிந்திருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றீர்கள். மறுமுனையில் மொபைல் திரையில் இருக்கும் நபரும் அதே போல எதிர்பார்க்கிறார். மிக சரியான டேட்டிங் ஆடை அணிவதில் இருந்து கிடைக்கும் ஆனந்தத்தை பறித்துக் கொள்ள தனிமை காலத்தை அனுமதிக்காதீர்கள். தொடங்குவதற்காக, உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும் உங்கள் உரையாடலில் அது வெளிப்படும். மிகவும் முக்கியமாக, இந்த டேட்டிங்கை(ஆன்லைன்) எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் மற்றும் சில முயற்சியையும் கொடுப்பதாக இருக்கும். 2000-ம் ஆண்டில் பிறந்த 73 சதவிகித இந்தியர்கள் டேட்டிங் செய்வதற்காக பிரத்யோகமாக உடை அணிகின்றோம் என்று ஒரு சர்வேயில் சொல்லி இருக்கின்றனர்.
வேடிக்கையாக ஏதேனும் செய்யுங்கள்
ஒரு நல்ல திரைப்பட அனுபவத்தை அல்லது ஒரு டேட்டிங் இரவை மீண்டும் உருவாக்குங்கள். அதனை மொபைல் திரையில் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்போதும் அந்த டேட்டிங் நாளை நினைவில் கொள்ளும்படி அதனை ஆன்லைன் உலகத்துக்கு ஏற்றவாறு மாற்றுங்கள். ஒரு படத்தினை இருவரும் சேர்ந்து பார்ப்பது அல்லது மது அருந்தும் டேட்டிங் ஆகிய செயல்பாடுகள் வேடிக்கையாக இருக்கும். உங்களுக்குப் பொருத்தமானவர்களின் வேடிக்கையான பக்கத்தை அறிவதற்கும் உதவும். தவிர பொழுதுபோக்கில் ஒருவருக்கு ஒருவர் விருப்பத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
உரிய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்
யாரோ ஒருவருடன் பொருந்துவதற்கு நிகழ்காலம் போன்ற சரியான நேரம் இல்லை. சுவரஸ்யமான அல்லது நீண்டகாலம் மறந்து போன உரையாடலை எடுத்துக் கொண்டு தொடருங்கள். வழக்கமான அந்த நாட்களை விடவும் வாழ்க்கை கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. எனவே இந்த நேரத்தை எடுத்துக் கொண்டு, நீங்கள் என்ன வகை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மனரீதியான, உணர்வுப்பூர்வமான தொடர்பை முன்னெடுங்கள். தனிமைப்படுத்துதல் காலம் ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறது. உண்மையில் யாராவது ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அது உங்களுக்கான நேரத்தை உருவாக்கி இருக்கிறது. ஆன்லைன் டேட்டிங் மூலம் அடுத்தகட்டத்துக்கு அந்த உறவை எடுத்துச் செல்வதற்கு நீங்கள் இணக்கமானவர்தான் என்பதை உறுதி செய்யுங்கள். “2000-ம் ஆண்டுகளில் பிறந்த 38 சதவிகித இந்தியர்கள் ஆன்லைன் டேட்டிங் முறையில்தான் தங்களுக்கு பொருத்தமானவர்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒருவரை சந்திப்பதற்கு முன்னதானஅழுத்தம், தூரத்தில் உள்ள ஒருவரை நேரில் ஈர்ப்பது போன்ற சிக்கல்களை விடவும் ஆன்லைனில் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். உடனே உரையாடலை தொடங்க முடியும்,” என்று ஆய்வு கூறுகிறது.
அவசரப்படாதீர்கள்
ஆன்லைன் டேட்டிங், வீடியோ கால் செய்வது, தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்வது ஆகியவற்றை மேற்கொள்வதற்கு முன்பு ஒருவருக்கு ஒருவர் நல்ல உறவை உருவாக்கிக் கொள்ள முதலில் தங்களைப் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளுங்கள். மீண்டும் தொடர்பு கொள்வது மற்றும் மெதுவான டேட்டிங்கை கற்றுக் கொள்வதற்கு நிகழ்காலத்தைப் போல சரியான நேரம் இல்லை.
உங்களை நீங்கள் இழக்க வேண்டாம்
உங்களுடைய முதல் டேட்டிங்கின்போது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மவுனமான சூழல்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்கிறதா? அதனால் தயவு செய்து நம்பிக்கை இழக்க வேண்டாம். ஒரு நபரிடம் இது போன்ற வழுக்கல்கள் ஏற்படலாம். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். எதிர்காலத்தில் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் இந்த தருணங்களை வேடிக்கையான கதைகளாக பேசிக் கொள்ளலாம். எனவே, பொறுமையாக இருங்கள், கொஞ்சம் சிரியுங்கள்.
“இந்தியாவில் 26 சதவிகிதம் அளவுக்கு உரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. 12 சதவிகிதம் அளவுக்கு பொருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2000-ம் ஆண்டுகளில் பிறந்த 91 சதவிகித டேட்டிங் ஆப் உபயோகிப்பாளர்கள் ஆன்லைனில் தொடர்ந்து டேட்டிங் செய்வதாகக் கூறியிருக்கின்றனர்” என OkCupid என்ற டேட்டிங்க் ஆப் நிறுவனம் கூறி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil