ஊரடங்கு நேரத்தில் மக்கள் கூகுளில் அதிகம் தேடியது இந்த வார்த்தையைத்தான்

Google search : வீட்டிலிருந்து பணி செய்யும்போது, சாப்பாடு, தூக்கம் உள்ளிட்டவற்றுடன், வழக்கமான வேலைகளை, வழக்கமான நேரங்களிலேயே தொடர்ந்து செய்யுங்கள்

By: Published: May 17, 2020, 2:24:23 PM

சுவாச பயிற்சிகள், விர்சுவல் தியானம், ஓய்வு, அமைதியான பாடல்கள் ஆகியவற்றை அதிகம் தேடியதாக கூகுள் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த ஊரடங்கு நம்மை பல வழிகளிலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், பலருக்கு, இது அவர்கள், தங்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. கூகுள் தேடலில் மக்கள் அதிகளவில் சுய பாதுகாப்பு குறிப்புகள் குறித்து தேடியதிலிருந்து, அதற்கான ஆதாரம் கிடைக்கிறது.

சுவாச பயிற்சிகள், விர்சுவல் தியானம், ஓய்வு, அமைதியான பாடல்கள் ஆகியவற்றை அதிகம் தேடியதாக கூகுள் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிடுவோமா என்ற அச்சம் ஒருபுறம், வீட்டிற்குள் அடங்கிக்கிடப்பது ஒருபுறம் என இரண்டும் சேர்ந்து மன அழுத்தத்தை அதிகரித்துவிட்டது. அது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை, உணவு, தூக்கம் என ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது. இதனால், ஒரு நாளை எப்படி ஒருங்கிணைப்பது, எப்படி அமைதியாக இருப்பது என்ற இரண்டு குறித்தும் மக்கள் அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர். வீட்டை நேர்த்தியாக பராமரிப்பது எப்படி என்ற கேள்வியே கடந்த ஒரு மாதமாக அதிகளவில் கூகுளில் தேடப்பட்ட கேள்வியாகும்.

வீட்டிலிருந்து பணி செய்யும்போது, சாப்பாடு, தூக்கம் உள்ளிட்டவற்றுடன், வழக்கமான வேலைகளை, வழக்கமான நேரங்களிலேயே தொடர்ந்து செய்யுங்கள் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு, ஏதேனும் ஒரு பொழுதுபோக்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் புதிய செயல்களை செய்ய வேண்டும் அல்லது புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர் வலியுறுத்துகிறார்கள். நமது சமையல் திறன்களை பரிசோதித்து, அவற்றை வளர்த்துக்கொள்வதற்கு இது சரியான நேரம். வீட்டிலேயே ஆரோக்கியமான உணவை சமைக்க முயற்சி செய்யலாம். மேலும், உடற்பயிற்சி, தற்போது அத்தியாவசியமான ஒன்று, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும், நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்துவதற்கும், மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் அது உதவும். உங்கள் நண்பர்களுடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்வதற்கு இது உகந்த நேரம். அது போனில்தான் என்றாலும், உங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, உங்கள் உறவை வலுப்படுத்துங்கள்

தமிழில் : R. பிரியதர்சினி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus lockdown self care google search google trends report

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X