குழந்தைகளின் பாதத்தில் தோன்றும் தோல்புண்கள் கொரோனா வைரஸ் தொடர்பானதா?

பெரும் அளவிலான மேம்படுத்தப்பட நுண்ணுயிரியல் சோதனைகள் அல்லது மூலக்கூறு நுட்பங்கள் தோலில் நாவல் கொரோனா வைரஸ் இருப்பதை வெளிப்படுத்தவும், கண்டுபிடிப்புகளை சரிபார்க்கவும் உதவும்

By: Published: July 5, 2020, 11:38:03 AM

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், ஏன் இந்த தோல் புண்கள் உருவாகுகின்றன என்பதை கண்டறியும் மதிப்பீட்டு முறைகள் தேவை என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதத்தில் தோல் சிவத்தல் மற்றும் வீக்கம் காணப்படுகிறது. இது கோவிட் பாதம் என்று அழைக்கப்படுகிறது. இது நாவல் கொரோனா வரஸ் தொற்றுடன் தொடர்புடையது அல்ல என்றும், ஆய்வின் போது கொரோனா தொற்றாத குழந்தைகளிடத்திலும் இது காணப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. ஸ்பெயினில் உள்ள லா ஃபீ பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை புதிதாக தோலில் ஏற்பட்ட அழற்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 20 குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினர் உட்பட 32 நோயாளிகள் பங்கேற்றனர்.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட கோவிட் 19 ஆய்வுகளின்படி, குழந்தைகள் மற்றும் இளம்பருவ வயதினரிடம் காணப்படும் கடுமையான அக்ரோ-இஸ்கெமியா எனும் இந்த தோல் புண்கள், கொரோனாவை உருவாக்கும் சார்ஸ்-சிஓவி-2 தொற்றுக்கான சாத்தியமுள்ள அறிகுறியாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.

எனினும், இப்போது ஜாமா தோல் நோயியல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் இந்த தோல் புண்கள், கோவிட் 19- தொற்றுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜுங்கல் ரோகா-கின்ஸ் என்பவர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஏன் இந்த தோல் புண்கள் உருவாகுகின்றன என்பதை கண்டறியும் மதிப்பீட்டு முறைகள் தேவை என்று வலியுறுத்துகின்றனர்.

இதற்காக அவர்கள், நோயாளிகளிடம் நாவல் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கிறதா என்று ஆர்டி-பிசிஆர் ஆய்வக சோதனையை மேற்கொண்டனர். தோல்புண்களின் சாத்தியமுள்ள தோற்றத்தை அறிந்து கொள்ள பல்வேறு வகையான ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஆய்வின் அடிப்படையில் ஆறு நோயாளிகளிடம் தோல் திசு மாதிரி ஆய்விலும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர்.
1 முதல் 18 வயதுவரை 20 பேர் கொண்ட நோயாளிகளில் 13 ஆண் நோயாளிகள் , 7 பெண் நோயாளிகள் இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கான எதிர்மறை ஆன்டிபாடிகள் உட்பட இதில் எந்த ஒரு நோயாளியும் குறிப்பிடத்தக்க அசாதாரணமான ரத்த குறைபாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறினர். தோல் மாதிரி ஆய்வில், பெர்னியோசிஸ் எனப்படும் அழற்சியின் சிறப்பியல்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆய்வின்போது மேற்கொள்ளப்பட்ட உற்றுநோக்கலில், கொரோனா தொற்றின் தீவிரத்தின் போது கொரோனா தொற்று இல்லாதவ்வர்களைக் கொண்ட ஒரு குழுவில் இந்த தோல்புண்களின் சிறப்பியல்புகள் இருந்தன. இந்த திடீர் தோல் புண்கள் மூன்று வெவ்வேறு காட்சிகளை விளக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

“நோயின் மிகவும் தொடக்க நிலையில் இருக்கும் நோயாளிகளிடம் பி.சி.ஆரின் எதிர்மறை மற்றும் சேரோலாஜிக் சோதனையானது முடிவுகளை விளக்கும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி இரண்டாவது மாற்றாக, தோல் புண்கள் என்பது நோய்தொற்றின் வெளிப்படையான வெளிப்பாடாக இருக்கலாம் என்று சொல்கின்றனர். நோயாளிகள் ஒருமுறை தொற்றுக்கு ஆட்பட்டால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்பபோது கண்டறியக்கூடிய வைரஸ் துகள்கள் இல்லை என்பது தெரியவந்தது.

மூன்றாவது சாத்தியம் பற்றி கூறும் விஞ்ஞானிகள், “உடம்பில் குறைந்த அளவிலான வைரஸ்கள் கொண்ட நோயாளிகளிடம் மருத்துவ அறிகுறிகளாக அவை வளர்ச்சி பெறாது என்பதால்தான் ஆய்வின் போது நோய்கிருமி கண்டறியப்படவில்லை” என்றனர்.
இந்த நிலையில், குழந்தைகளில் கோவிட் 19-ன் வெளிப்பாடுகள் தோல்புண்களாக இருக்கலாம்.கால் விரல்கள் உட்பட்ட முனைகளில் சிறிய ரத்த நாளங்களில் சிறிய ரத்தக்கட்டிகள் உருவாகலாம். இதுபோன்ற அசாதாரணங்கள், தீவிர கோவிட் 19 தொற்றுடன், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், கொண்ட நோயாளிகளிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆய்வுகள் நடத்தப்பட்ட குழந்தைகளிடம் இந்த அபாய சாத்தியங்கள் இல்லாதபோது, இந்த விளக்கத்தை அது ஆதரிக்காது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த தொடர் நிகழ்வில் 20 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடம் கடுமையான அக்ரல் தோல் மாற்றங்கள், கோவிட் 19- ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள வெளிப்படுத்தப்படவில்லை” என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.

விரிவான சோதனைகள் அக்ரல் புண்களுக்கான பிற ஆபத்தான காரணிகளை கண்டறிய தவறியதால், தனிமைப்படுத்தலின் போதான வாழ்க்கை மாற்றங்கள், வெறும் காலில் வீட்டுக்குள்ளேயே நடத்தல், அதிக நேரம் உட்கார்ந்த நிலையிலேயே இருத்தல் ஆகியவை இந்த கண்டுபிடிப்புகளை விவரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகின்றனர்.

குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட ஆய்வு காரணமாக, ஒரே ஒரு மையத்தைச் சேர்ந்த நோயாளிகளிடம் இருந்து குறுகிய காலத்தில் சோதனைகள் மேற்கொண்டதாக விஞ்ஞானிகள் கூறினர்.

பெரும் அளவிலான மேம்படுத்தப்பட நுண்ணுயிரியல் சோதனைகள் அல்லது மூலக்கூறு நுட்பங்கள் தோலில் நாவல் கொரோனா வைரஸ் இருப்பதை வெளிப்படுத்தவும், கண்டுபிடிப்புகளை சரிபார்க்கவும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஜாமா தோல் நோயியல் பிரிவின் ஆசிரியர் கிளாடியா ஹெர்னாண்டஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள், வைரஸ் தொற்று செயல்பாடுகள் அல்லது இதர வேறு முறைகள் , இந்த கோவிட் பாத்ததுடன் தொடர்புடையதா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்கின்றனர்.
“தோல் புண்கள் குறித்த தோற்றம் குறித்து எங்களுடைய புரிதல் தொடர்ந்து முழுமையடையாமல் இருந்தாலும் கூட கோவிட் 19 தொற்றுடன் தொடர்புக்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறும் புரோட்டின் கட்னியஸ் கண்டுபிடிப்புகளை தோல் நோய் நிபுணர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Corona virus symptoms toes what is covid toes symptom in kids

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X