ஆராய்ச்சிக்காக அவசரசிகிச்சைக்கை அளிப்பவர்கள், சிசிக்சை நாய் மற்றும் அதை கையாள்பவருடனும் 5 நிமிடங்கள் செலவிட வலியுறுத்தப்பட்டது. அவர்களின் பயம் குறிப்பிட்ட அளவு குறைவது கூர்ந்து கவனிக்கப்பட்டது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இன்றைய நாட்கள் கடினமானவை. ஏனெனில் சுகாதார ஊழியர்கள் நாளுக்கு நாள் தினமும் கொரோனா வைரஸ் நோயாளிகளை கையாள்கிறார்கள். தினமும் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பணிக்குச்சென்று திரும்புகிறார்கள். இதனால் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களும் புது பலம் பெற்ற குணமடைந்து வீடு திரும்பி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள். நாள் முழுவதும் நோயாளிகளுடனே தொடர்ந்து பணி செய்யும்போது, சுகாதார பணியாளர்கள் சோர்வடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதோ அவர்களுக்கு ஒரு நற்செய்தி, பயிற்சி பெற்ற சிகிச்சை நாய்கள் (தெரபி டாக்ஸ் எனப்படும் பயிற்சிபெற்ற சிகிச்சை நாய்கள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு, முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட ஆதரவு தேவைப்படுபவர்களிடம் அன்பு காட்டவும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் பயிற்சியளிக்கப்பட்டிருக்கும்) இந்த தொற்றுநோய் காலங்களில் அவசரசிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் மன அழுத்தத்தை குறைக்க அல்லது நிர்வகிக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
122 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட ஆய்வின் அறிக்கை அவசர கல்வி மருத்துவம் என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதை அறிவியல் ரீதியாக மதிப்பிடுவதற்கு குறைந்த அளவு தகவலே உள்ளது. ஏராளமான சுகாதார பணியாளர்களுக்கு நாய் உதவுவது, அவர்களின் உணர்வு ரீதியான நல்வாழ்வை மேம்படுத்த உதவுவதாக இந்த ஆய்வின் தலைவர், அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத் சேர்ந்த ஜெப்ரி ஏ கிளைன் என்பவர் தெரிவிக்கிறார். ஆராய்ச்சிக்காக அவசரசிகிச்சைக்கை அளிப்பவர்கள், சிசிக்சை நாய் மற்றும் அதை கையாள்பவருடனும் 5 நிமிடங்கள் செலவிட வலியுறுத்தப்பட்டது. அவர்களின் பயம் குறிப்பிட்ட அளவு குறைவது கூர்ந்து கவனிக்கப்பட்டது. அதே நேரத்தில் வண்ணத்தாளில் வண்ணம் தீட்ட அனுமதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து இது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களின் வேலை நேரம் முடிந்த பின், பயிற்சி பெற்ற சிகிச்சை நாய்களுடன் நேரம் செலவிட்ட பின்னர், அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் அளவு சுரப்பது வெகுவாக குறைந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவசரகிசிச்சையளிக்கும் நிபுணர்கள் அவர்கள் பணிபுரியும் நேரத்தில், சிகிச்சை நாய்களை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்களா என்பதும், அவர்கள் எந்த அளவிற்கு நாய் மற்றும் அதனை கையாள்பவர் அல்லது இருவரிடம் இருந்தும் நன்மையடைந்தார்கள் என்பது ஆய்வில் தெளிவாக தெரியவில்லை என்று கிளைன் கூறுகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், புர்டியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலன் பெக் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆரோன் கெட்சர் ஆகியோர், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாயால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை கண்டுபிடித்து, பட்டியலிட்டுள்ளனர். அவை கீழ்வருமாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் இயல்பாகிறது. இதயத்துடிப்பு சீராகிறது. தசை இறுக்கம் குறைகிறது. சுவாசம் முறையாகிறது உள்ளிட்ட நிறைய நன்மைகள் மனஅழுத்தத்தை குறைக்கின்றன.
தமிழில் : R.பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.