சீனாவை அச்சுறுத்தும் கோரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Coronavirus in China : சீனாவின் வூஹான் நகரில் பெரும் அளவிலும், சாங்காய், பெய்ஜிங் போன்ற நகர்களிலும் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
Coronavirus in China : சீனாவின் வூஹான் நகரில் பெரும் அளவிலும், சாங்காய், பெய்ஜிங் போன்ற நகர்களிலும் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
coronavirus, coronavirus outbreak in china, things to know before travelling to china, indian express, indian express news,
சீனாவின் வூஹான் நகரில் பெரும் அளவிலும், சாங்காய், பெய்ஜிங் போன்ற நகர்களிலும் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
காற்றில் இருக்கும் புதிய வகை வரைஸ் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் வூஹான் நகரில் இதன் தாக்கம் தொடங்கியதில் இருந்து நூற்றுக்கணக்கானோருக்கு இது தொற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. ஒரே மாதிரியான அறிகுறிகள் காரணமாக இது இப்போது சார்ஸ்(SARS) என்ற வைரஸ் உடன் ஒப்பிடப்படுகிறது. சீனாவுக்கு பயணம் போவது குறித்தோ அல்லது ஜப்பானின் ஒருபகுதிக்கோ, தாய்லாந்து மற்றும் தென்கொரியாவுக்கோ பயணம் செய்வதாக இருந்தால், சில முக்கியமான சுகாதார நலன் குறிப்புகளை கவனத்தில் கொள்ளவும். அப்போதுதான் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.
Advertisment
Advertisements
கோரோனா வைரஸ் என்பது என்ன?
விலங்குகளிடம் பொதுவாக காணப்படும் பெரிய வைரஸ் குழுவாக இது கருதப்படுகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் முன் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தகவலின் படி, இந்த வைரஸ்கள் விலங்குகளின் வழியாக, அதாவது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடும். சீனாவின் புத்தாண்டு கடந்த 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக அந்நாட்டுக்கு பலர் சென்று வருகிறார்கள் என்பதால் இந்த வைரஸ் காரணமாக மேலும் அதிகப்பேர் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது.
அறிகுறிகள்
உடல்நலக்குறைவாக இருப்பது போன்ற பொதுவான உணர்வு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். இந்த வைரஸ் உடலினுள் இருக்கும்போது மூக்கு ஒழுகும், தொண்டையில் புண் ஏற்படும். தலைவலி மற்றும் காய்ச்சல் இருக்கும். இதே அறிகுறிகள் ஃப்ளூ காய்ச்சலுக்கும் சில நாட்கள் இருக்கும். பின்னர் போய்விடும். கோரோனா வைரஸ் சுவாசப்பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டால் மரணத்தை ஏற்படுத்தக் கூடும்.
பரவுதல்
இந்த வைரஸ் தொற்றிய விலங்குடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளும்போது இந்த வைரஸ் அவர்களுக்கும் பரவும். அதன் பின்னர் இது இன்னொரு ஆரோக்கியமான மனிதருக்கு சளியின் மூலமாக பரவும். இருமல், தும்மல், கைகுலுக்கல் அல்லது வைரஸ் தாக்கப்பட்ட மனிதரை தொடுவதன் மூலம், அதன் பின்னர் உங்கள் கையை உங்கள் வாயில், கண்ணில், மூக்கில் வைத்தால் பாதிக்கப்படும்.
தடுப்பு முறைகள்
சில அறிகுறிகள் தென்பட்ட உடன் பீதியடையாதீர்கள். மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள். தடுப்பு மருந்துகள் இன்னும் கிடைக்கவில்லை எனவே, கூடியவரை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்வதன் மூலம் உங்களுக்கு பரவும் அபாயத்தை குறைத்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் தொடர்பு கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் மற்றும் சோப்பால் உங்கள் கைகளை கழுவ வேண்டும். முடிந்தவரை தொடர்ச்சியாக நீராகாரத்தை உட்கொள்ளவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமான அளவு ஓய்வு எடுங்கள்.
பயணிக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
குறிப்பாக சீனாவுக்குப் பயணம் செல்லும் முன்பு பாதிக்கப்பட்ட இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சீனாவின் வூஹான் நகரில் பெரும் அளவிலும், சாங்காய், பெய்ஜிங் போன்ற நகர்களிலும் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தொற்றுவதைத் தடுக்க ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் தங்கள் நாட்டின் விமான நிலையங்களில் உடல் வெப்பத்தை அளவிடும் முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"