Advertisment

முக கவசம் - உயிர்க்கவசம் ; முக கவசத்தை மற்றொருவருடன் பகிரலாமா?

முகக்கசவங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஒரு முகக்கவசத்தை ஒருவர் மட்டுமே அணிய வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus, face mask, face mask faq, face mask coronavirus, homemade face mask, surgical mask, n95 mask, face mask all you need to know, coronavirus covid 19, face mask how to wash, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

corona virus, face mask, face mask faq, face mask coronavirus, homemade face mask, surgical mask, n95 mask, face mask all you need to know, coronavirus covid 19, face mask how to wash, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

முகக்கவசத்தை இன்னொருவருக்குக் கொடுப்பது என்று பகிர்ந்து கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட முகக்கவசத்தை ஒருவர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

Advertisment

பொது இடங்களில் பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி மற்றும் மகராஷ்டிரா அரசுகள் அண்மையில் அறிவித்திருக்கின்றன. இது வெறுமனே முகக்கவசம் அணிவது மட்டுமல்ல. முகக்கவசத்தை சரியாக விதிமுறைப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, ஒருவர் தமது பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்.

முகக்கவசங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1.நீங்கள் முகக்கவசம் அணிகிறீர்களா?

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, நீங்கள் இருமல், தும்மல் போன்ற உடல் நலக்குறைவோடு இருக்கும்பட்சத்திலோ அல்லது கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும் நபராக இருக்கும்பட்சத்தில் நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சுய சுகாதாரத்தைக் கடைபிடிக்கும் வகையில் வீட்டில் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை ஒருவர் அவசியம் அணிய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

2.என்ன வகையான முகக்கவசம் அணிய வேண்டும்?

சுகாதாரப் பணியாளர்கள் அல்லது கொரோனா நோய்தொற்று தாக்கத்துக்கு உள்ளானவர்கள் என்95 முகக்கவசம் அல்லது மூன்றடுக்கு சர்ஜிக்கல் முகக்கவசம் அணிய வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் படிக்கவும். பயன்படுத்திய உடன் தூக்கி எறியப்படக் கூடிய முகக்கவசங்களை ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதர மருத்துவ சிகிச்சை தேவைப்படாதவர்கள் அல்லது சுவாசக் கோளாறு கொண்டவர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை மீண்டும், மீண்டும் உபயோகிக்கலாம்.

3. வீட்டில் முகக்கவசங்கள் தயாரிப்பது எப்படி?

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளின்படி தையல் இயந்திரத்தைக் கொண்டு அல்லது தையல் இயந்திரம் இல்லாமலேயே வீட்டிலேயே நீங்கள் முகக்கவசங்கள் தயாரிக்க முடியும். முகக்கவசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் துணி ஏற்கனவே துவைக்கப்பட்டு, நன்கு காய வைக்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளவும். அதன்பிறகுதான் அதனை முகக்கவசமாக தைக்க வேண்டும்.

4. எத்தனை முகக்கவசங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்?

சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இரண்டு முகக் கவசங்களை வைத்திருக்க வேண்டும். ஒன்றை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தியதை துவைத்து காய வைத்திருக்கும்போது இன்னொன்றை பயன்படுத்த வேண்டும்.

5. நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்கும்போது என்னவெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்?

முகக்கவசம் அணியும் முன்பு உங்களுடைய கைகளை முறையாக 20 நொடிகள் சோப் மற்றும் தண்ணீர் கொண்டு அல்லது இதர கைகழுவ உபயோகிக்கப்படும் திரவங்களைக் கொண்டோ கைகழுவ வேண்டும். முக க் கவசம் உங்கள் முகத்தில் சரியாக பொருந்துகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தவிர வாய், மூக்கு ஆகியவற்றை முழுமையாக மூடுகிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். முகக் கவசத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான கைகளில் மட்டுமே தொட வேண்டும். முகக்கவசத்தை எடுக்கும்போது அதன் வெளிப்புறப்பகுதிகளைத் தொடக் கூடாது. முகக்கவசத்தை நீக்கிய உடன், உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி உங்கள் கைகளை திரும்பவும் சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது திரவ வடிவிலான சுத்திகரிப்பான்களை பயன்படுத்தி கழுவ வேண்டும்.

6. எவ்வளவு காலத்துக்கு முகக்கவசம் அணியவேண்டும்?

ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த நுரையீரல் பாதுகாப்புத்துறை தலைவர் டாக்டர் ரவிசங்கர் ஜா இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்துக்காக பேசியபோது, “மூன்றடுக்கு சர்ஜிக்கல் முகக்கவசத்தை 6 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். மீண்டும் அதனை உபயோகிக்கக் கூடாது. என்95 முகக்கவசத்தை ஐந்து நாட்கள் வரை திரும்ப,திரும்ப உபயோகிக்கலாம். அதனை அடிக்கடி தூய்மைப்படுத்தி முறையாக காய வைக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கப்படும் முகக்கவசங்களை 16 மணி நேரம் வரை உபயோகிக்கலாம்.” ஒருமுறை உபயோகித்து தூக்கிய எறியக் கூடிய முகக்கவசத்தை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் உபயோகிக்கக் கூடாது. அது ஈரமான உடன் உடனே அதை மாற்றி விட்டு, வேறு ஒன்றை அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

7. முகக்கவசங்களை எவ்வாறு துவைக்க வேண்டும்?

முகக்கவசங்களை வீட்டைச் சுற்றிப் போட்டு வைக்கக் கூடாது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிவுறுத்தல்படி அதனை எவ்வளவுக்கு எவ்வளவு உபயோகிக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவைகளை துவைக்க வேண்டும்.

சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி சோப் மற்றும் சுடு தண்ணீர் கொண்டு முகக்கவசங்களை துவைக்க வேண்டும். பின்னர் அதனை உலர வைக்க வேண்டும். சர்ஜிக்கல் மற்றும் என்95 முகக்கவசங்களை துவைக்க க் கூடாது என்று டாக்டர் ஷா அறிவுறுத்துகிறார். துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை மட்டுமே துவைக்க வேண்டும்.

8. வீட்டில் உள்ள இதர நபர்களுடன் முகக்கவசங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா?

முகக்கசவங்களை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஒரு முகக்கவசத்தை ஒருவர் மட்டுமே அணிய வேண்டும்.

9 . முகக்கவசத்தை உபயோகித்தபின்னர் எப்படி அதனை அப்புறப்படுத்த வேண்டும்?

மூடப்பட்ட குப்பத்தைத் தொட்டியில் உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசங்களை போட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment