சமூகவிலகல் நடைமுறைகளை பின்பற்றும்போது, உலகத்தில் இருந்து நாம் தொடர்பற்று இருக்கலாம். ஆனால், நாம் விரும்பும் ஒருவரை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. உங்களுடைய எண்ணங்களை மனசின் அடி ஆழத்துக்குள் போட்டு வைத்துக் கொள்வதை விடவும், அதனை பேசி விடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இப்போது நாம் நான்காவது ஊரடங்கு காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றோம். நம்மில் பெரும்பாலானோர் நமது பாதுகாப்பு கருதி வீடடங்கி இருக்கின்றோம். நீண்ட நேரம் பணியாற்றுகின்றோம். தினசரி அடிப்படையில் பணிகளின் காலெக்கடுவைத் துரத்திச் செல்கின்றோம். இதனை புதிய இயல்பு என்றும் அழைக்கலாம். பலர் இந்த சூழலின் வித்தியாசத்தை ஏற்றுக்கொள்வதற்கான வழிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சிக்கலான காலகட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும் வளங்களை உருவாக்குகின்றனர்.
பெரும் மன அழுத்தம், நிச்சயமற்ற தன்மை ஆகியவை இருந்தாலும் நீங்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை புரிந்து கொள்வது அவசியம். ஒட்டு மொத்த உலகமும் இந்த தொற்றுக்கு எதிராகப் போராடுகின்றது. என்னவாயினும் நீங்களும் உங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க குறிப்பாக உங்கள் மன நலத்துக்காக, அந்த போராட்டத்தில் நீங்களும் இணையுங்கள்.
ஊட்டசத்து நிபுணர், ரெய்கி பயிற்சியாளர்,தெரபிஸ்ட் ஊர்வசி பூரி என்பவர், “நம்மை பலவீனப்படுத்தும் விளைவுகளைக் கொண்ட கோவிட்-19-கீழ் சமநிலையுடன் இருக்க சில எளிய வழிகளைக் கூறுகின்றார். மிகவும் அதீதமான மனஅழுத்தத்தை நீங்கள் உணரும் போது, அவர் கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றும்படி கூறுகின்றார்.
ஆழமாக மூச்சை இழுத்து சுவாசித்து இப்போதைய சூழ்நிலை குறித்து மறு மதிப்பீடு செய்யுங்கள்; உங்களுக்கு நீங்களே பாதிப்புக்கு உள்ளாக வேண்டாம். அடிக்கடி நமது தலையில் இது போன்ற மெல்லிய குரல்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும். நாம் போகும் வழியில் விஷயங்கள் நகராதபோது நாம் ஒவ்வொன்றையும் இழந்து விட்டோம் என்று அந்த குரல் சுட்டிக்காட்டும். இந்த குரல்கள் இரவு நேரங்களில் பலரை தூக்கத்தில் இருந்து எழுப்பும். அப்போது நீங்கள் ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்து சுவாசியுங்கள். உங்களை சுற்றிலும் பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கின்றது என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்கள். உங்களுடைய ஐம்புலன்களும் நன்றாக வேலை செய்கின்றன. உங்களிடம் உள்ள அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது வழக்கமான நேரம் அல்ல என்பதை வெறுமனே நினைவில் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த நல்லதை நீங்கள் செய்கிறீர்கள்,” என்றார் பூரி.
ஒரு கணம் மவுனமாக இருங்கள்; பிறருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பது இயல்பான ஒன்று. “குறிப்பாக நீங்கள் சமூக வலைதளங்களை பார்க்கும்போது, அதில் தனிப்பட்ட சாதனைகள் கொண்ட மனிதர்கள் இருக்கின்றனர். சிலர் பட்டப்படிப்பு முடித்திருக்கின்றனர். பிறருக்கு நல்ல புரஜெக்ட்கள் கிடைத்திருக்கின்றன. இவையெல்லாம் உங்களைத் தேவையற்ற ஒப்பீடுகளை நோக்கி இட்டுச் செல்லும். நீங்கள் அதிகமாகத் தூண்டப்படுவீர்கள். எனவே ஒரு கணம் மவுனமாக இருங்கள். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பயணங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆப்பிளை, ஆரஞ்சுடன் ஒப்பிடுவது அர்த்தமற்றது” என்கிறார் பூரி.
ஏற்றுக்கொள்ளுதல்; மறுதலிப்பவராக இருக்காதீர்கள். “மறுதலிப்பது என்பது சரி செய்யக் கூடிய செயல்பாட்டை தாமதப்படுத்துவதாகும். நான் எங்கேயோ ஒருமுறை படித்தேன்; ‘மறுப்பதில் ஒரு கருணை இருக்கின்றது’, நாம் கையாளக்கூடிய அளவுக்கு மட்டுமே அனுமதிப்பது இயற்கையின் வழி. நீங்கள் இழப்பின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டால், உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்கத் தொடங்குங்கள். உங்களை அறியாமலேயே நீங்கள் குணப்படுத்தும் செயலைத் தொடங்கி வீட்டீர்கள். மறுதலிப்பு நம் செயல்பாட்டை தாமதப்படுத்தும். மறுதலித்தல், மாற்றம் எட்மநு மிகப்பெரியதாகத் தெரியும். மறுதலிப்பு நம்மை விரைவாக சோர்வடையச் செய்யும். சந்தேகத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். இன்னொருபுறம், ஏற்றுக்கொள்ளுதல் என்பது, உண்மையை விரைவுபடுத்தி குணப்படுத்தும் செயல்பாட்டை முன்னெடுத்து, புதிய தொடர்புகளை உருவாக்குகின்றது. புதிய அர்த்தமுள்ள உறவுகளை, புதிய இடைசார்பு நிலைகளை உருவாக்குகின்றது.
உங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், தொடர்ந்து இணைந்திருங்கள்; சமூகவிலகல் நடைமுறைகளைப் பின்பற்றும்போது, உலகத்தில் இருந்து நாம் தொடர்பற்று இருக்கலாம். ஆனால், நாம் விரும்பும் ஒருவரை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன. உங்களுடைய எண்ணங்களை மனசின் அடி ஆழத்துக்குள் போட்டு வைத்துக் கொள்வதை விடவும், அதனை பேசி விடுவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பலநேரம், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுதல் என்பது, ஒரு வெளி கண்ணோட்டத்தை உங்களுக்குத் தந்து உதவும். அவற்றை மறுசீரமைக்க உதவுகிறது.
சுறுசுறுப்பாக இருங்கள், ஒரு அட்டவணையை பின்பற்றுங்கள்; நீங்கள் அதிக நேரம் தூங்க க் கூடாது என்பதை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத வேண்டும். பகலில் தூங்குவது, வழக்கமான நடைமுறைகளைப் பாதிக்கும். தூக்கக் குறைபாடு மனதை பாதிக்க க்கூடியதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட அட்டவணையைப் பின்பற்றுதல், வழக்கமான உணர்வை மீட்டெடுக்க உதவும்.
தியானம் செய்யுங்கள்; உங்கள் வழமான வேலைகளுக்குத் திட்டமிடுங்கள். தியானம், யோகா, ஜூம்பா போன்ற வேறு உடற்பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வீட்டில் நடைபயிற்சி கூட மேற்கொள்ளலாம். ஒவியம் வரைதல், தைத்தல், பாடுதல் அல்லது இசை கேட்டல் ஆகியவை கூட இதமான சிகிச்சையாக இருக்கும்,பீதியை தவிர்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.