கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரசு பிறப்பித்துள்ள இந்த ஊரடங்கு காரணமாக அலுவலங்கள் மூடப்பட்டு பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுருத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்வதை வழக்கமான அம்சமாக ஊக்குவிக்கும் சில நிறுவனங்களைத் தவிர்த்து, மற்ற எல்லா நிறுவனங்களும் எதிர்பாராத வகையில் இந்த வைரஸ் காரணமாக தங்கள் அலுவலகங்களை மூடிவிட்டு வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கலாச்சாரத்துக்கு மாறியுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் போது wifi மற்றும் பிராட்பேண்டு இணைய வசதி இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கள் கைபேசி டேட்டாவையே பயன்படுத்துகின்றனர். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை ஆதரிப்பதற்காக மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன் ஐடியா ஆகியவை தங்களது முந்தைய திட்டங்களில் நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் இணைய டேட்டாவின் அளவை அதிகரித்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள் தனியாக, வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான இணைய டேட்டா திட்டங்களையும் வடிவமைத்துள்ளன. நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக பிஎஸ்என்எல் மற்றும் ACT Fibernet ஆகிய நிறுவனங்கள் இணையத்துக்கு சிறப்பு சலுகைகளையும் அறிவித்துள்ளன.
வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஏற்பட்டுள்ள டேட்டாவுக்கான தேவை அதிகரிப்பை கணக்கில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ ரூபாய் 251/- க்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 51 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கப்படும். டேட்டா மட்டும் வழங்கப்படும் இந்த திட்டம் இன்னும் அதிகப்படியான பயனர்களை கவர்வதற்காக, இந்நிறுவனத்தால் புத்திசாலித்தனமாக சந்தைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இது வெறும் டேட்டா மட்டுமான ரீசார்ஜ் திட்டமென்பதால், இந்த ரிசார்ஜ் திட்டத்தில் தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வழங்கப்படாது. மேலும் பயனர்களின் தேவைக்கேற்ப ரிலையன்ஸ் தனது 4 பிரீபெய்ட் திட்டங்களான ரூபாய் 11, 21, 51 மற்றும் 101 ஆகியவற்றுக்கு டேட்டாவின் அளவை இரட்டிப்பாக்கி உள்ளது.
இதை போல் வோடாபோன் ஐடியாவும் தனது புதிய பிரீபெய்ட் திட்டங்களுக்கு இரட்டிப்பு டேட்டா வழங்க துவங்கியுள்ளது. ரூபாய் 249/- க்கு ரீசார்ஜ் செய்யும் போது பயனர்களுக்கு தினமும் 3GB டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். மேலும் ரூபாய் 399/- மற்றும் ரூபாய் 599/- ஆகிய திட்டங்களில் தினமும் 3GB டேட்டா முறையே 56 மற்றும் 84 நாட்களுக்கு வழங்கப்படும்.
தரைவழி இணைப்பு உள்ள பயனர்களை மனதில் வைத்து பிஎஸ்என்எல் லின் சிறப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது. பயனர்கள் 5GB வரை இலவச இணைய சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். AVT Fibernet பயனர்களுக்கு உதவுவதற்காக இலவச இணைய சேவையை 300mbps என்ற வேகத்தில் தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மார்ச் 31 வரை வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.