Coronavirus outbreak COVID 19 reason behind lockdown : கொரோனா நோயினை எதிர்த்து உலக நாடுகள் அனைத்தும் கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளது. சீனா, இத்தாலி, ஸ்பெய்ன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்ற இந்த நேரத்தில் இந்தியா 3 வார காலத்திற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று இரண்டாம் நாள். பலருக்கும் ஊரடங்கு உத்தரவால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனாவுக்கு முறையான தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வருமுன் காப்பதே தற்போதைய மருந்தாக உள்ளது.
மேலும் படிக்க : வாழ்த்துகள் வுஹான்… மீண்டும் பொது வாழ்விற்கு உங்களை வரவேற்கிறோம்!
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமாக இந்த நோய் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. சில பயணிகளுக்கு நோய் தொற்றும் இருக்காது, நோயும் வராது. ஆனால் அவர்களால் ஒரு நோயை பரப்பும் காரணிகளாக இருக்க முடியும். ஊரடங்கு இல்லாமல் அனைத்து மக்களும் பொதுவெளியில் புழங்கும் சூழல் வந்தால், ஒருவரால் சராசரியாக இரண்டரை நபர்களுக்கு இந்த நோயினை பரப்ப இயலும். அதுவும் வெறும் ஐந்தே நாட்களில். ஒரு மாதத்தில் ஒருவர் மூலம் மட்டும் 406 நபர்களுக்கு நோயினை பரப்ப இயலும்.
ஆனால் ஊரடங்கு உத்தரவின் கீழ் மக்கள் முடக்கப்பட்டால், நோயால் பாதிக்கப்பட்டவரை கண்டு பிடிப்பதும் சுலபம். அவரால் ஐந்து நாட்களில் 1.25 நபர்களுக்கு மட்டுமே நோயினை பரப்ப முடியும். ஒரு மாதத்தின் முடிவில் அவரால் நோய் தொற்றுக்கு ஆளான நபர்கள் வெறும் 15 பேர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பதும் எளிமையானதாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil