/tamil-ie/media/media_files/uploads/2020/04/cats-5.jpg)
coronavirus outbreak Lockdown days Dancer Rukmani performances khandam jathi
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலரும் தங்களின் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். பலர் தங்களின் தினசரி வாழ்க்கையை வாழ இயலவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். சிலர் கொரோனா நோய் தொற்று எப்போது முற்றிலுமாக முடியும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். பாடகர்கள் பலரும் சில நிமிட பாடல்களை பாடி தங்களின் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
இந்நிலையில் நடிகையும் நடனக்கலைஞருமான ருக்மணி, தன்னுடைய மாணவர்களுக்கு பயிற்சிகள் ஏதும் வழங்காமல் வீட்டில் நடின பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். சில நேரங்களில் தன்னுடைய ரசிகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க நடனமாடி அதனை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.
ருக்மணி தமிழில், ஆனந்த தாண்டவம் மற்றும் காற்றுவெளியிடை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு பரதநாட்டிய கலைஞராக இந்த ஆடை அணிந்து தான் ஆட வேண்டும் என்ற மரபுகளையும், ஸ்டிரியோடைப்களையும் உடைத்து வருகிறார். இந்த குவாரண்டைன் காலத்தில் தன்னுடைய மாணவர்களை பார்த்து, அவர்களுக்கு நடனம் கற்பிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க : ஊரடங்கு சுவாரசிய சம்பவங்கள் : மாணவியின் சந்தேகத்தை வித்தியாசமாக தீர்த்த ஆசிரியர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.