coronavirus, dirty little secret, coronavirus scam, coronavirus ransom, send money or get coronavirus, covid 19, extortion email, extortion
இணைய வழி குற்றவாளிகள் கொரோனா வைரசை ஒரு கருவியாக கொண்டு உலகம் முழுவதும் பயமுறுத்தி வருகின்றனர். மோசடிக்காரர்கள் எவ்வாறு உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் போல் வேடமணிந்து, பிஷிங் தாக்குதல் எனப்படும், அங்கீகாரம் பெற்ற வெப் தளத்திலிருந்த அனுப்பியது போன்ற மெயில்களை அனுப்புகிறார்கள். நாமும் அதை உண்மை என்று நம்பி தீங்கிழைக்கக்கூடிய லிங்க்குகளை திறந்துவிடுகிறோம். அதன் மூலம் தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு விடுகின்றன. புதிய தீங்கிழைக்கக்கூடிய வெப்சைட்களில் பதிவுசெய்து கோவிட் – 19 தொடர்பான, போலியான கொரோனா வைரஸ் ஆப்களை போட்டுவைத்துள்ளனர். போலியான கோவிட் – 19ஐ தொடரும் டாஷ்போர்ட்டுகளை உருவாக்கி வைத்து, அதை நாம் பயன்படுத்தும்போதும், நமது கணினியை ஹேக் செய்துவிடுகின்றனர்.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தற்போது உலகம் முழுவதும் ஒரு ஊழல் உலவிக்கொண்டிருக்கிறது. சோபோஸ் என்ற பிரிட்டிஷ் சாப்ட் வேர் மற்றும் ஹார்டு வேர் நிறுவனத்தின் புதிய அறிக்கையில், இணைய வழி குற்றவாளிகள், மிரட்டி பணம் பறிக்கும் இமெயிலை மக்களுக்கு அனுப்புகிறார்கள். அதில் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால், மெயில் பயன்படுத்துபவரின் குடும்பத்தினருக்கு, கொரோனா வைரசை பரப்பிவிடுவோம் என்று மிரட்டி மெயில் அனுப்புகின்றனர்.
Advertisment
Advertisements
பணம் கொடுங்கள் அல்லது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுங்கள்
Sextortion, செக்ஸ்டார்சன் என்பது, எல்லோரும் அறிந்ததே. அங்கு இணைய வழி குற்றவாளிகள் “அழுக்கான சின்ன ரகசியங்கள் ” என்ற பெயரில் இமெயில் அனுப்பி, உங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மால்வேர் மூலமாக எங்களிடம் சிக்கியுள்ளது. நீங்கள் எங்களுக்கு பெரும்தொகை கொடுத்து அவற்றை மீட்காவிட்டால், அவற்றை உலகமெங்கும், உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இணையதளத்தில் பகிர்ந்துவிடுவேன் என்று மிரட்டி பணம் பறிக்கும் செயலாகும்.
தற்போது குற்றவாளிகள், கொரோனா வைரஸ் பிரச்னையை பயன்படுத்தி, பணம் பறிப்பது புதிய போக்காக தொடங்கியுள்ளது. இணைய வழி குற்றவாளிகள் தற்போது 4000 டாலர் பணம் கேட்டு, உங்கள் ரகசியங்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல, உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரசை பரப்பிவிடுவோம் என்று கூறி தாங்கள் கேட்கும் பணத்தை பிட்காயின்களாக வழங்க கேட்டு இமெயில் செய்து வருகின்றனர்.
அவர்களை நம்பவைக்கவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கவும், மெயில் அனுப்புபவர், மெயில் பெறுபவரின் பாஸ்வேர்டை முதலில் வெளியிடுவார். பின்னர் உங்களின் அனைத்து பாஸ்வேர்டுகளும் எங்களுக்கு தெரியும் என்பார்கள். உங்களை தொடர்ந்து நோட்டமிட்டு, உங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா வைரசை பரப்புவோம் என்று எச்சரிப்பார்கள். மேலும் அந்த இமெயிலில் உங்களின் அனைத்து ரகசியங்களை வெளிப்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டு அனுப்புவார்கள். அந்த முழு இமெயிலின் தகவல்கள் அனைத்தையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்கீரீன் ஷாட்டில் காணுங்கள்:
அடுத்தது என்ன?
உங்களது பாஸ்வேர்டை அவர்கள், பொதுவாக கிடைக்ககூடிய தகவல்களில் இருந்து திருடியிருக்க வாய்ப்புள்ளது. எனவே இது முழுவதும் ஊழலாக இருக்கும்பட்சத்தில், தற்போது என்ன செய்வது? சோபோசின் முதன்மை ஆராய்ச்சி அறிவியலாளர் பால் டக்ளின் கூறுகையில், இதுபோன்ற இமெயில்களை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம், பணமும் செலுத்த வேலையில்லை. இது பொய் மூட்டை. எனவே கவலைகொள்ள வேண்டாம் என்கிறார். இதுபோன்ற ஊழல்களில் ஈடுபடுவோரிடம் உங்களின் தகவல்கள் இருக்காது, உங்களின் குடும்பத்தினர்கள் யார், அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் போன்ற தகவல்கள் நிச்சயம் தெரிந்திருக்காது என்று அவர் கூறுகிறார்.
அதுபோன்ற இமெயில்களுக்கு பதிலளிக்காதீர்கள். அந்த வஞ்சகர்களை தொடர்புகொள்ள தோன்றும். ஆனால் இங்கு அவர்கள் விற்பதற்கு எதுவுமில்லை. நீங்கள் வாங்குவதற்கும் எதுவுமில்லை. அவர்களை தொடர்பு கொள்வதன் மூலம், அவர்கள் உங்களை மீண்டும் அச்சுறுத்துவதற்கு நீங்கள் வாய்ப்பளிக்கிறீர்கள் என்று பொருள். அதன் மூலம் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்றுதான் அர்த்தம் என்று டக்ளின் கூறுகிறார். அதுபோன்ற இமெயில் உங்களுக்கு வந்தால், நீங்கள் அதை புறக்கணித்துவிட்டு, மற்றவர்களிடம் காண்பித்து அவர்களையும் எச்சரிக்கை செய்யுங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.
தமிழில்: R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil