கொரொனா வைரஸ் பற்றி இனி அச்சம் வேண்டாம் : தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் புதிய மைல்கல்
New software for coronavirus study : ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்த வைரசின் ஒரு பகுதியை முதல் முப்பரிமாண அணு வரைபடமாக உருவாக்கியுள்ளனர்
New software for coronavirus study : ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்த வைரசின் ஒரு பகுதியை முதல் முப்பரிமாண அணு வரைபடமாக உருவாக்கியுள்ளனர்
புதிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கு தற்போதைய தடுப்புமருந்துகள் உரிய பாதுகாப்பை அளிக்கமுடியாத நிலையில் இதைப் பற்றிய கட்டுக்கதைகளை அடக்க உலக நலவாழ்வு அமைப்பு புதிய தடுப்புமருந்துக்கான தேவையைக் குறிப்பிட்டுள்ளது. அதையடுத்து புது வைரசுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிப்பதில் ஒரு முக்கிய கட்டமாக, ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலவாழ்வு நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து, இந்த வைரசின் ஒரு பகுதியை முதல் முப்பரிமாண அணு வரைபடமாக உருவாக்கியுள்ளனர் என்கிறது, டொரண்டோ பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம். இந்த வைரஸ், ஸ்பைக் புரதம் எனப்படும் மனித உயிரணுக்களுடன் ஒட்டியிருப்பதும் அவற்றை பாதிக்கக்கூடியதுமானதும் ஆகும். டொரண்டோ பல்கலை. ஆராய்ச்சியாளர் அலி புஞ்சானியின் கிரையோஸ்பார்க் எனும் ஆய்வின் மென்பொருளின்படி இந்தக் கண்டறிவு அமைந்துள்ளது. இந்த ஆய்வானது, கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதம் தொடர்பான தரவுகளை வினைப்படுத்தவும் அதன் மூலம் அந்த ஸ்பைக் புரதத்தின் துல்லியமான நிகழ்நேர முப்பரிமாணப் படங்களைப் பெறுவதற்கும் மேற்கொள்ளப்படுவதாகும்.
Advertisment
Advertisements
” சில மாதங்களுக்கு முன்னதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நோய் தொடர்பாக எங்களால் உற்றறிய முடிகிறது. மூலக்கூறு அளவில் அது எப்படி செயல்படுகிறது என்பதையும் பார்க்க இயலுகிறது. ரொம்பவும் உற்சாகமாக இருக்கிறது” என புஞ்சானி கூறியிருக்கிறார்.
இந்த ஆய்வின் இணை ஆசிரியரும் ஆஸ்டின் பல்கலை. மூலக்கூறு உயிர் அறிவியல் துறையின் இணைப் பேராசிரியருமான ஜாசன் மெக்லெல்லான், இந்த மென்பொருளானது பயணத்தின்போது தரவு செயலாக்கத்துக்கு உதவியது என்றார். உண்மையில், மூல மாதிரியிலிருந்து அணு வரைபடத்தை உருவாக்குவதற்கு ஆராய்ச்சியாளர்கள் 12 நாள்களே எடுத்துக்கொண்டனர்.
“ புதுமையான அளவீடுகளில் ஒன்றான முப்பரிமாண மாறுபாட்டுப் பகுப்பாய்வானது, கரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் முக்கியமான நகர்வுகளை நுட்பமாக அறிந்துகொள்ள உதவியது. அப்புரதமானது ஏற்பி பிணைப்பு மற்றும் சவ்வூடு இணைவுக்கு முக்கியமானது ஆகும்.” என மெக்லெல்லன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, கிரையோஸ்பார்க் கிரையோஜெனிக் மின்னணு நுண்ணோக்கி அல்லது கிரையோ இ.எம். எனும் நுட்பத்தைப் பயன்படுத்தச் செய்வதாகும். கிரையோஸ்பார்க் வசதி மூலம் முப்பரிமாணக் காட்சியாக்கத் துல்லியத்தை வைத்து uறைந்த மாதிரிகளின் எலக்ட்ரான்களைப் படம்பிடித்து புரதங்களின் அதிகச்செறிவான படங்களை ஆராய்ச்சியாளர்கள் பெறுவதற்கு வழிசெய்தது. இவ்வாறு தடுப்புமருந்து உருவாக்குவதில் தங்களின் பணி உதவியாக இருக்கும் என அந்த அறிவியலறிஞர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.
- முன்னதாக, இந்த ஆய்வானது, ’சைன்ஸ்’ ஆய்விதழில் வெளியானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil