கொரோனா அச்சுறுத்தல் – அவசர கால கடனுதவிக்கு கைகொடுக்கிறது எஸ்பிஐ

கோவிட் – 19 ஆல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள கடன் வாங்குபவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் விதமாக கூடுதல் கடன் வசதியை தகுதியான பயனர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Coronavirus,Coronavirus pandemic,SBI,emergency credit line
Coronavirus,Coronavirus pandemic,SBI,emergency credit line

நோவல் கொரோனா வைரஸ் காரணமாக வணிகம் பாதிப்படைவதால் நாட்டின் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்குபவர்கள் சந்திக்கும் எதாவது liquidity mismatch க்காக ஒரு அவசர கடன் வரியை (emergency credit line) திறந்துள்ளது. கூடுதலான liquidity வசதி – Covid-19 Emergency Credit Line (CECL) ரூபாய் 200/- கோடி வரை நிதி வழங்கும். மேலும் இது ஜீன் 30, 2020 வரை கிடைக்கும் என எஸ்பிஐ கூறியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த கடன் 7.25 சதவிகித வட்டி விகிதத்தில் 12 மாத கால அவகாசத்துடன் வழங்கப்படும்.

கோவிட் – 19 ஆல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள கடன் வாங்குபவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் விதமாக கூடுதல் கடன் வசதியை தகுதியான பயனர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. CECL தற்போதைய நெருக்கடி சூழலை மாற்ற உதவும் என வங்கி கூறியுள்ளது.

மார்ச் 16, 2020 நிலவரப்படி SMA 1 அல்லது 2 என வகைப்படுத்தப்படாத அனைத்து நிலையான வங்கி கணக்குகளுக்கும் credit line திறந்திருக்கும் மேலும் அவை credit line ஐ பெற தகுதியானவை, என வங்கி தெரிவித்துள்ளது.

NPA/stressed asset ஆகக்கூடிய திறன் உள்ள கணக்குகளை அடையாளம் காண Special Mention Accounts (SMA) அறிமுகப்படுத்தப்பட்டது.

31 முதல் 60 நாட்கள் வரை overdue period உள்ளவை SMA-1 கணக்குகள். அதே சமயம் 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை overdue உள்ளவை SMA -2 கணக்குகள்.

தொழில் அமைப்பான Ficci, மேற்கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வின் படி நாட்டில் உள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா வைரஸின் தாக்கத்தை தங்கள் செயல்பாடுகளில் கண்டுள்ளன.

உலகளாவிய தொற்று நோயால் சுமார் 80 சதவிகித வணிகங்கள் பணபுழக்கத்தில் சரிவை கண்டுள்ளன என அது மேலும் காட்டுகிறது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronaviruscoronavirus pandemicsbiemergency credit line

Next Story
பான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்புPan Card, Aadhaar card, PAN, Income Tax Department,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com