நாம் ராகி சாப்பிடுவதால், தையிராட்டு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தைராய்டு வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. வாழ்வு முறையில் மாற்றங்கள், குடும்ப வரலாறு, ஆட்டோ இம்யூன் நோய்களால் கூட தைராய்டு ஏற்படலாம்.
இந்நிலையில் ராகி சாப்பிடுவதால், நமது உடல் ஐயோடினை எடுத்துகொள்ளும் செயல்பாட்டை பாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. ராகியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் இருக்கும் சத்துகள், தைராய்டு ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது.
இதில் இருக்கும் கோயிட்ரோஜெனிக் காம்பவுண்ட்ஸ், தைராய்டு சுரப்பி, ஐயோடினை எடுத்துகொள்வதை தடுக்கலாம். இந்நிலையில் நாம் ராகியை வரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். குறிப்பாக இதை நன்றாக ஊறவைக்க வேண்டும். சுமார் 2 மணி நேரமாவது ஊற வேண்டும். இதுபோல் மற்ற சிறுதானியங்களையும் நான் ஊறவைத்து, நன்றாக கழுவி சமைக்க வேண்டும்.
இந்நிலையில் ஏற்கனவே தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரிடம் கேட்ட பிறகு ராகியை எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக இருக்கும். தைராய்டு உள்ளவர்கள் சோயா மற்றும் சோயா சேர்த்த உணவுகளை எடுத்துகொள்ளலாம். கேபேஜ், புரோக்கோலி, கீரையை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், தைராய்டு மருந்துகளை உடல் சரியாக உள்வாங்கிக்கொள்ளாது.
Read in english