சில நாடுகளுக்கு இடையில் உள்ள நட்புறவு உடன்படிக்கைகள் காரணமாக, முதலீட்டு மற்றும் சுற்றுலா தொழிற்துறையின் பரஸ்பர முன்னேற்றத்துக்காக, குறிப்பிட்டதொரு காலப் பகுதிக்குள் எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாது, சில நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதாவது, அந்தக் காலப்பகுதியில் வீசா இல்லாமலேயே சில நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
1.இந்தோனேசியா
சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவுகளுடன் பயணிக்க முடியுமான ஒரு நாடாக இந்தோனேசியா உள்ளது. பச்சை பசேலாக இருப்பதனால், இலங்கையைப் போன்றே அங்கும் இயற்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இந்தியாவுடன் நெருங்கிய கலாசார தொடர்புகளைக் கொண்ட இந்தோனேசியாவில் வெண்மணல் கடற்கரைகள், எரிமலைகள் என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இங்கு சென்றவுடன் உரிய ஆவணங்களை அளித்து 25 டாலர் கட்டணம் செலுத்தி விசா பெறலாம். இந்த விசாவுடன் 30 நாட்கள் வரை தங்களாம்.
2.கம்போடியா
தமிழக மாமன்னர்களால் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் கம்போடியாவில் புகழ்பெற்றது. இந்திய கலாசாரத்தை பலவிதங்களிலும் ஒத்திருக்கும் கம்போடியாவில் வரலாற்றுச்சின்னங்கள் மற்றும் பசுமையான இடங்கள் கண்ணைக் கவரும். இங்கு இறங்கியதும் 20 டாலர் வழங்கி விசா பெற்றுக் கொண்டு அதிகபட்சமாக 30 நாட்கள் அங்கு தங்கிக் கொள்ளலாம்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு பாஸ்போட், செலவுக்குத் தேவையான பணம் மற்றும் திரும்பி வருவதற்கான விமான டிக்கெட் மற்றும் ஆவணங்கள் இருந்தால் போதும்.
3.மாலத் தீவுகள்
இந்தியர்கள் இங்கு சென்று அதிகபட்சமாக 90 நாட்கள் இலவச விசா பெற்று தங்கிக் கொள்ளலாம். மாலைதீவில் சொகுசு ரிசார்ட்கள் ஒரு புறமும் டைவிங்,ஸ்கோனர்க்ளிங் போன்ற நீர் சகாச நிலையங்களும் அழகிய பவளப்பாறை நிறைந்த கடற்கரையும் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவையாக உள்ளது. ஹோட்டல்களில் தங்குவதற்கு குறைந்தது 30 அமெரிக்க டாலராவது வைத்திருக்க வேண்டும்.
4.மொரீசியஸ்
இந்தியர்கள் இங்கு சென்று அதிகபட்சம் 60 நாட்கள் தங்குவதற்கான விசா பெற்றுக்கொள்ளலாம். உலகின் மிக அற்புத தீவுகளில் ஒன்றாக மொரீசியஸ் திகழ்கின்றது.
5.தாய்லாந்து
இந்தியர்கள் தாய்லாந்துக்கு சென்று வெறும் 35$ செலவில் விசா பெற்றுக் கொள்ளலாம். இங்கு 15 முதல் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதிக்கப்படுகிறது.