தம்பதிகள் பலருக்கும் மாதவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகங்கள் இருக்கவே செய்கிறது. அவர்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர் ஜெயஸ்ரீ பதில் அளித்துள்ளார்.
தம்பதிகள் பலருக்கும் மாடவிடாய் நாட்களில் உடலுறவு கொள்ளலாமா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கலாம். அந்த நாட்களில் உறவுகொண்டால் தொற்று ஏற்படுமா என்ற சந்தேகங்களும் உள்ளனர்.
இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த கருத்தரித்தல் மற்றும் பாலியல் பற்றி கற்பிக்கும் மருத்துவர் ஜெயஸ்ரீ பதில் அளித்துள்ளார். கணவன் மனைவி மாதவிடாய் நாட்களில் உறவுகொள்ளலாமா என்றால், மாதவிடாய் நாட்களில் தாராளமாக உறவு கொள்ளலாம். ஆனால், இருவரும் சௌகரியமாக உணர வேண்டும். உறவு கொள்ளும்போது இருவரும் சௌகரியமாக உணர வேண்டும். இதனால், சில நன்மைகளும் இருக்கிறது. மாதவிடாய் நாட்களில் வலி, சோர்வாக உணர்வார்கள், உறவு கொள்ளும்போது, ஃபோர்பிளே செய்யும்போது ஆக்ஸிடண்டாஸ் உற்பத்தி செய்யும். இதனால், நன்றாக உணர்வார்கள். ரிலாக்ஸாக உணர்வார்கள் என்று கூறுகிறார்.
மேலும், மாதவிடாய் காலத்தில் உறவுகொண்டால் தொற்று ஏற்படும் என்று கூறப்படுவது குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகையில், மாதவிடாய் சமயத்தில் உறவுகொள்ளும்போது, ஆணுறை பயன்படுத்துவது அவசியம். மாதவிடாய் இல்லாத நேரத்தில் பாதுகாப்பு இல்லாமல் உறவு கொண்டாலும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், பொதுவாக உறவுகொள்ளும்போது ஆணுறை பயன்படுத்துவது நல்லது என்று கூறுகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"