/indian-express-tamil/media/media_files/2025/03/01/EVExNcGrW2wppFW163tF.jpg)
வரத்து குறைவால் விலை உயர்வு
கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகாலையில் பனியும், பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலும் உள்ளது. இதனால் வாழை சாகுபடி மற்றும் வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கோவையில் வாழைக்காய் மண்டிக்கு வாழைத்தார்கள் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் அனைத்து ரக வாழைப் பழக்கங்களின் விலையும் உயர்ந்து உள்ளது.
கோவை மாவட்டம் மட்டுமின்றி சத்தியமங்கலம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நாளொன்றுக்கு 6 டன் முதல் 8 டன் வரை வாழ்த்தார்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் தற்போது 4 டன் முதல் 5 டன் வரை மட்டுமே வாழ வாழைத்தார்கள் விற்பனைக்கு வருகிறது. இதனால் அனைத்து ரக வாழைத்தார்கள் விளையும் அதிகரித்து உள்ளது.
வரத்து குறைவால் கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு - ஒரு கிலோ செவ்வாழை ரூபாய் 120 க்கு விற்பனை..!#Coimbatore#bananapic.twitter.com/MRC96ccv8L
— Indian Express Tamil (@IeTamil) March 1, 2025
ஒரு கிலோ செவ்வாழைப் பழம் ரூபாய் 120 முதல் 125 வரை விற்பனை ஆகிறது. பச்சை வாழைப் பழம் ஒரு கிலோ ரூபாய் 40 முதல் ரூபாய் 50, ரஸ்தாலி ரூபாய் 70, கேரளா ரஸ்தாலி ரூபாய் 70 முதல் 80 வரையும், நேந்திரம் பழம் ரூபாய் 65 வரை விற்பனை ஆகிறது.
கடந்த சில வாரங்களை விட அனைத்து வாழைகளும் ஒரு கிலோவுக்கு ரூபாய் 15 முதல் 25 வரை விலை உயர்ந்து உள்ளது. வாழைத்தார் ஒன்று ரூபாய் 1,600 முதல் ரூபாய் 1,300 வரை விற்பனையானது என்றும் வியாபாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
வாழைத்தார்கள் விலை அதிகரித்து உள்ளதால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.