/indian-express-tamil/media/media_files/2024/11/08/JsTleE4kaDKfwKOQLkwQ.jpg)
மருதமலையில் திருக்கல்யாண உற்சவம்
கோயம்புத்தூரில் உள்ள முருகனின் ஏழாம் படை வீடான மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா நிறைவடைந்ததையொட்டி திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தது.
அதிகாலை, 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி ராஜ முத்தங்கி அலங்காரத்தில், காட்சியளித்தார். இந்த அலங்காரத்தில், சுப்பிரமணிய சுவாமியை தரிசித்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.
அதனை தொடர்ந்து காலை 10:15 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. அதன்பின் பகல் 12:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருக்கல்யாணத்தை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.