கோவையில் இன்று முதல் 24 வரை 4 நாட்கள் நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் குறித்த தேசியமாநாடு 2024 (நாப்கான் 2024) பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 2,200 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதில் சர்வதேச அளவில் 54"பேரும் - தேசிய அளவில் 640 பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள்.
தேசிய நுரையீரல் மருத்துவர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுவாச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
சமீப காலமாக நாள்பட்ட மூச்சுக்குழாய்நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நாள்பட்ட சுவாசக் கோளாறுகள் அதிகரித்து வருவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைமாற்றங்கள் மூலம் அவற்றைதடுப்பது குறித்தும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குறித்தும், சுவாசநோய் தொடர்பான சிகிச்சையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நவீன முன்னேற்றங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் 2,200"க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த 54"பேரும், தேசிய அளவில் 640 பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் நுரையீரல், அது தொடர்பான தீவிரசிகிச்சை மற்றும் சுவாச மருத்துவம் ஆகியவற்றில் சமீபத்திய முன்னேற்றங்களை உள்ளடக்கிய 9 அமர்வுகள் இடம் பெறுகிறது. மேலும் இந்ததுறையில் முன்னணி மருத்துவ நிபுணர்களின் 600 சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.
மேலும் ஆஸ்துமா நோய்கள் குறித்தும் அதற்கான நிவாரணம் குறித்த முக்கிய விவாதங்களும், அதில் தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் குறித்தும் பங்கேற்பாளர்களிடையே விவாதங்களும் நடைபெறுகிறது.
ப்ரோன்கோஸ்கோபி மற்றும் பியூச்சரிஸ்டிக் ஆக்சிஜன் டெலிவரி முறைகள் உள்ளிட்ட அதிநவீன நுட்பங்களை அறிந்து கொள்ளும் விதமாக 14 பயிற்சி பட்டறைகளும் இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ளது. சுவாச மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகளுக்கான விருதுகளும் வழங்கப்படுகிறது.
மேலும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் புதுமைமிக்க பணிகளை பார்வையாளர்கள் இடையே விவாதிக்க இருக்கிறார்கள். மருத்துவ சாதனங்கள், நோயறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்பங்களில் சமீபத்திய முன்னேற்றங்களின் கண்காட்சியும் இந்த மாநாட்டில் இடம் பெறுகிறது.
இது குறித்து நாப்கான் 2024 மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர்.மோகன் குமார் கூறுகையில், சுவாசநோய்கள் அதிகரிப்பு என்பது ஒருகுறிப்பிடத்தக்க பொது சுகாதார கவலையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து உலகம் முழுவதிலுமிருந்து 2,200 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை கோவை பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இவ்வாறு தெரிவித்தார்.
இந்த மாநாட்டை சிறப்பு விருந்தினர் நுரையீரல் மருத்துவத்தில் உலக புகழ்பெற்ற டாக்டர் பேராசிரியர் அதுல்சி. மேத்தா துவக்கி வைத்தார்.
நுரையீரல் மருத்துவ மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார், செயலளார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் கோவை மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.