/indian-express-tamil/media/media_files/YkSxvNU8D4IMjPf49Ajs.jpg)
/indian-express-tamil/media/media_files/NTYA7HMwy1qwlT6wxG7y.jpeg)
நவராத்திரி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கோவையில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 03ஆம் தேதி துவங்குகிறது.
/indian-express-tamil/media/media_files/SjRgXnhJ3ilzemHqBd75.jpeg)
10 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையில் கொலு பொம்மைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. நவராத்திரி பண்டிகையின் போது கோவில்களிலும், வீடுகளிலும் கொழு பொம்மைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்தக் கொலு பொம்மைகள் ஏதேனும் ஒரு கருத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்படும். அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர் போன்ற ஆன்மீக விடயங்கள் பிரபலமான கொலு பொம்மைகளாக கொலு கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
/indian-express-tamil/media/media_files/o5YgmLg1M3Nn202MT9Pa.jpeg)
இந்த ஆண்டு புது வரவாக, அயோத்தி ராமர், பூரி ஜெகன்நாதர் உள்ளிட்ட தெய்வீக விடயங்களும், மறைந்து போன நகர்வுகளை நினைவூட்டும் விடயங்களான பஞ்சுமிட்டாய் கடை, தாயக்கட்டை விளையாட்டு உள்ளிட்ட கொலு பொம்மைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
/indian-express-tamil/media/media_files/9A6FwNrtKpQMPWzcPyLl.jpeg)
கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் மக்கள் கோவைக்கு வந்து மிகவும் ஆர்வத்துடன் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றன. கடல் கடந்தும் கலாச்சாரத்தை கைவிடாத ஆன்மீக பக்தர்கள் கொலு பொம்மைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/RJBjuF8a5Gyu1rbnDDiE.jpeg)
நவராத்திரி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முந்தை ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலு பொம்மைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும், மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கொழு பொம்மைகளை வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
/indian-express-tamil/media/media_files/YkSxvNU8D4IMjPf49Ajs.jpg)
களி மண் மற்றும் காகித கூல் பயன்படுத்தி கைவினை வேலைபாடுகளில் கொலு பொம்மைகள் தயாரித்ததாக தெரிவித்த கலைஞர்கள், நவராத்திரிக்காக ஒருவருடம் கைவினை வேலைபாடுகளில் கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/eyRiNGhzw990koaAFjb9.jpeg)
மெசின்கள் ஆட்கொண்ட இந்த உலகில் கைவினை வேலைபாடுகளுக்கு தனி மவுசும் மதிப்பும் மக்களிடம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்க வாழ் இந்திய பெண் ஒருவர் கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கடையில் ஆர்வமுடன் கொலு பொம்மைகளை வாங்கிச் சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.