கோவையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சொக்கலிங்கம்(54)
வ.உ.சி மைதானத்தில் நேற்றிரவு சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரோந்து பணியிலிருந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
சொக்கலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2024 ம் ஆண்டில் இருந்து பணிபுரிந்து வந்தவர்.
கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.