மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கோவையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் சென்று கோவில் நிர்வாகிகளுக்கு இணைப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக ரம்ஜானை கொண்டாடினர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள் ரம்ஜான் தொழுகையை முடித்து மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலுக்குச் சென்று கோவில் நிர்வாகிகள், அய்யனார் ஆதீனம் ஆகியோர்களை சந்தித்து இனிப்புகளை வழங்கினர்.
மேலும் கோவிலில் இருந்த பக்தர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். அதே போல் கோவில் நிர்வாகிகளும் அய்யனார் ஆதீனம் ஆகியோர்களும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து கட்டி அணைத்து இந்து கடவுள்களின் படங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.