Advertisment

108 ஆசனங்களை 30 நிமிடத்தில் செய்து  உலக சாதனை…. கோவையில் அசத்திய மாணவர்கள்..!

கோவையில் 108 ஆசனங்களை 30 நிமிடத்தில் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் பள்ளி குழந்தைகள் இடம் பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
guiness record

யோகாசனம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவர்கள்

"108 ஆசனங்களை 30"நிமிடத்தில் செய்து  உலக சாதனை புத்தகத்தில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். 

Advertisment

கோவையில் 124 சிறுவர், சிறுமியர் இணைந்து 108 ஆசனங்களை 30 நிமிடங்களில் தொடர்ந்து செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

உடல் மற்றும் மனம்  ஆரோக்கியமாக இருக்க யோகா செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் யோகாவில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

இதில் மௌண்ட் கார்மல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பயிலும், எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுவர், சிறுமிகள் என 124 பேர் இந்த சாதனை நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதன் படி 108 ஆசனங்களை அனைவரும் இணைந்து 30 நிமிடங்களில் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். இதில் வஜ்ராசானம், சூரிய நமஸ்காரம், பத்மாசனம், என பத்திற்கும் மேற்பட்ட யோகாசனங்களை சிறுவர்கள் தொடர்ந்து செய்தனர்.

 தொடர்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் பாலமுரளி கிருஷ்ணன் ஆகியோர் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர்.

செய்தி: ரஹ்மான் - கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Yoga covai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment