New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/28/vKAxHjXKfgQGBuENBSIP.jpg)
பேருந்தில் இருந்து கீழே குதித்த பெண்
பேருந்தில் இருந்து கீழே குதித்த பெண்
கேரள மாநிலம் அட்டப்பாடியை சேர்ந்தவர் மருதன். அவரது மனைவி மஞ்சு (38). இவரது குழந்தைக்கு பிறந்தநாள் சான்றிதழ் பெற கோவை வந்துள்ளனர்.
இந்த சான்றிதழ் வாங்குவதற்காக மருதன் மற்றும் மஞ்சு நேற்று காலை அட்டப்பாடியில் இருந்து கோவை வந்தனர். பின்னர் வேறொரு பேருந்து மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பேருந்து ஆட்சியர் அலுவலகம் வருவதற்கு முன்பே மஞ்சு எழுந்து படிக்கட்டுக்கு வந்தார்.
பேருந்து ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயில் அருகே வந்தபோது திடீரென்று ஓடும் பேருந்தில் இருந்து அவர் கீழே குதித்தார்.
பேருந்தில் இருந்து குதித்த பெண்...சிசிடிவி காட்சி வெளியீடு#Coimbatore #CCTV pic.twitter.com/4iyG6JdOTF
— Indian Express Tamil (@IeTamil) February 28, 2025
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் கணவர் இறங்கியதாக எண்ணி மஞ்சு பேருந்தில் இருந்து கீழே குதித்தாக தெரிகிறது. பந்தைய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.