Advertisment

'ஏசியன் காமன்வெல்த் போட்டியில் வெல்வதே கனவு': யோகா உலக சாதனையாளர் நெகிழ்ச்சி பேட்டி

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதக்கங்களுடன் உற்சாக ஒரே இடத்தில் ஒன்று கூடிய யோகா கின்னஸ் சாதனையாளர்கள். காமன்வெல்த் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வது தங்களது கனவு- வைஷ்ணவி நெகிழ்ச்சி

author-image
WebDesk
New Update
Yo cbe.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யோகாவில் மாநில, தேசிய, சர்வதேச அளவில் சாதனை புரிந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த யோகா சாதனையாளர்கள் கோவையில் ஒரே இடத்தில் சந்தித்து பல்வேறு கடினமான யோகா ஆசனங்களை  செய்து அசத்தினர். கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. கடந்த 13 வருடங்களாக யோகாவில் பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ள இவர், அதே பகுதியில் யோவா யோகா அகாடமியை நடத்தி வருகிறார்.

Advertisment

Yo cbe1.jpg

இந்நிலையில் இவரிடம் பயிற்சி பெறும்  தமிழகம் முழுவதும் உள்ள யோகா சாதனையாளர்களை ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

Yo cbe2.jpg

இதில், திருச்சி, கோவை, வேலூர், ஈரோடு, சிவகங்க்க என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 34 யோகா சாதனையாளர்கள்  கலந்து கொண்டனர்.  5 வயது முதல் 16 வயது வரையிலான இதில் கலந்து கொண்ட அனைவரும் யோகா சாதனையில்  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். மாநில,தேசிய, சர்வதேச அளவில் யோகாவில் பல சாதனைகள் புரிந்த வீரர், வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Yo cbe3.jpg

இதனால் அரங்கம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் நடுவே யோகா சாதனையாளர்கள் தங்களது பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். குறிப்பாக உலக சாதனை நிகழ்வாக செய்த பல்வேறு கடினமான ஆசனங்களை ஒரே இடத்தில் செய்தது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

Yo cbe4.jpg

இது குறித்து யோகா உலக சாதனையாளரும், பயிற்சியாளருமான வைஷ்ணவி கூறியதாவது, உலக சாதனையாளர்கள் ஒரே இடத்தில் கூடி உள்ளதால் உலக அளவில் யோகா குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாகவும் பயிற்சி மையத்தின் மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாகவும், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார்., ஒரே இடத்தில் யோகா  சாதனையாளர்கள் ஒன்று கூடிய இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

செய்தி: பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment