COVID-19 Ayush Ministry recommends preventive Ayurveda measures : COVID-19- பொருத்தமான நடத்தைகளைப் பின்பற்றுவதைத் தவிர, மருத்துவ வல்லுநர்கள் தொற்றுநோயைத் தடுக்க ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஆயுஷ் அமைச்சகம் சில ஆயுர்வேத சுய பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது, அதை நாம் இங்கே பார்ப்போம்
பொதுவான நடவடிக்கைகள்
அடிக்கடி மிதமான சூட்டில் நீர் அருந்தவும்
மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, உலர்ந்த இஞ்சி, பூண்டு போன்ற மசாலா பொருட்கள் சமையலில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பொருட்களை பயன்படுத்தவும்
ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் வாய்க்கொப்பளிக்கவும்
எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு தயாரிக்கப்பட்டு உண்ண வேண்டும்
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா, பிராணயாமா மற்றும் தியானத்தை பயிற்சி செய்ய COVID-19 நோய்த்தடுப்பு நெறிமுறையில் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஏழு முதல் எட்டு மணி நேரம் போதுமான உறக்கம் தேவை, பகல்நேர தூக்கத்தைத் தவிர்க்கவும்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஆயுர்வேத நடவடிக்கைகள்
வெறும் வயிற்றில் காலையில் சவன்பிராஷ் 20 கிராம் சுடு நீரில் உட்கொள்ள வேண்டும்
கோல்டன் மில்க் – 150 மில்லி சூடான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடுங்கள்
அல்லது
குடுச்சி கன் வதி 500 மி.கி / அஸ்வகந்தா டேப்லெட்டை 500 மி.கி தினமும் இரண்டு முறை வெண்ணீரில் எடுத்துக் கொள்ளுங்கள்
கோல்டன் மில்க்
அல்லது
துளசி (4 பங்கு), இலவங்கப்பட்டை 2 பங்கு, 2 பங்கு உலர் இஞ்சி மற்றும் ஒரு பங்கு கருப்பு மிளகு போட்டு தயாரிக்கபப்ட்ட மூலிகை தேநீர் அருந்தவும்,
150 மில்லி சூடான தண்ணீரில் இந்த பொருட்களை கலந்து சுடவைத்து ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடுங்கள். சுவையை மேம்படுத்த வெல்லம், திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
கோல்டன் மில்க்
ஆயுர்வேத நடவடிக்கைகள்
காலை மற்றும் மாலை இரு நாசியிலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது பசு நெய் தடவவும்.
1 டீஸ்பூன் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் எடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க கூடாது, இரண்டு மூன்று நிமிடங்கள் வாயில் ஸ்விஷ் செய்து அதைத் துப்பிவிட்டு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
உலர்ந்த இருமல் மற்றும் தொண்டைப் புண் இருந்தால்
வெறும் நீரில் ஆவிப்பிடித்தல் அல்லது புதினா இலைகள், அஜ்வைன் அல்லது கற்பூரம் கொண்டு ஆவி பிடிக்கும் பழக்கத்தை நாள் ஒன்றுக்கு ஒரு முறை செய்யலாம்.
இயற்கையான சக்கரை அல்லது கனியுடன் கிராம்பு தூள் சேர்த்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை எடுத்து வந்தால் சரியாகும்.
இந்த நடவடிக்கைகள் சாதாரண வறட்டு இருமலுக்கும் தொண்டைப் புண்ணுக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil