Advertisment

ஓமிக்ரான் BF.7 அச்சம்.. நீங்கள் எப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?

இந்த மாறுபாடுகளில் பெரும்பாலானவை அவற்றின் பரவலில் வேறுபடுகின்றன, ஆனால் பொதுவாக அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. வயதானவர்கள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது இணை நோய் உள்ளவர்கள் தவிர, பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்த மாறுபாடுகள் லேசானவை என்று டாக்டர் பரேஷ் டெதியா கூறினார்.

author-image
WebDesk
New Update
covid-19

கொரோனா பரிசோதனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் (Source: Express Photo by Praveen Khanna)

உலகெங்கிலும் கொரோனா ஒரு பொது சுகாதார சவாலாகத் தொடர்கிறது, வாரந்தோறும் சுமார் 35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இப்போது ஓமிக்ரானின் புதிய மாறுபாடு, BF.7 பற்றிய பயம், மக்களை தடுப்பூசி போடவும், தங்களை பாதுகாப்பாக வைத்திருக்க கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றவும் தூண்டியுள்ளது.

Advertisment

கொரோனா சோதனை பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும், எப்போது சோதனை செய்யலாம் மற்றும் நீங்கள் செய்யக்கூடிய சோதனைகள் என்ன என்பது குறித்த விவரங்கள் இங்கே..

யார் அவசியம் சோதனை செய்ய வேண்டும்?

இந்தியாவில் கொரோனாவுக்கான பர்போசிவ் டெஸ்டிங் ஸ்ட்ரேடஜி குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஆலோசனையின்படி யாரெல்லாம் சோதனை செய்யலாம்:

சமூக அமைப்புகளில்:

-இருமல், காய்ச்சல், தொண்டை புண், சுவை அல்லது வாசனை இழப்பு, மூச்சுத்திணறல் அல்லது பிற சுவாச அறிகுறிகள் உள்ள நபர்கள்.

-முதியவர்கள் (60 வயதுக்கு கீழ்) மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அல்லது சிறுநீரக நோய், வீரியம், உடல் பருமன் போன்ற நோய்கள் உள்ளவர்கள்.

-சர்வதேச பயணத்தை மேற்கொள்ளும் தனிநபர்கள் (நாட்டின் குறிப்பிட்ட தேவைகளின்படி).

-வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி இந்திய விமான நிலையங்கள் / துறைமுகங்களுக்கு வரும் சர்வதேச பயணிகள்.

மருத்துவமனை அமைப்புகளில்:

சிகிச்சையளிக்கும் மருத்துவரின் விருப்பப்படி சோதனை மேற்கொள்ளப்படலாம் என்று ICMR பரிந்துரைக்கிறது.

பரிசோதனை செய்ய தேவை இல்லாதவர்கள்

-அறிகுறியற்ற நபர்கள்

-உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் தொடர்புகள், இணை நோய்களில் அடிப்படையில் அதிக ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களாக இருந்தால் தவிர

-திருத்தப்பட்ட டிஸ்சார்ஜ் கொள்கையின்படி கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நோயாளிகள்.

-மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு பயணத்தை மேற்கொள்ளும் நபர்கள்

சோதனை ஏன் முக்கியமானது?

கொரோனா  மாறுபாடு சீனாவில் பாதிப்புகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்ததால், இருமல், சளி மற்றும் காய்ச்சலுடன் வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனையை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும், என்று ஃபரிதாபாத் ஃபோர்டிஸ் மருத்துவமனை டாக்டர் ரவி சேகர் ஜா கூறினார்.

அறிகுறிகள் என்ன?

உடல்வலி, தலைவலி, மேல் சுவாசக் குழாய் தொற்று போன்றவற்றுடன் கூடிய அசாதாரண காய்ச்சலைக் கண்காணிக்க வேண்டும். புதிய அறிகுறிகள் அல்லது வழக்கமான அறிகுறிகள் மோசமடைவதைப் பற்றி ஒருவர் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமே மாறுபாடுகளை வேறுபடுத்துவதற்கு எந்த வழியும் இல்லை, என்று மும்பையின் கர், பி.டி. இந்துஜா மருத்துவமனை  டாக்டர் பரேஷ் தேதியா கூறினார்.

இந்த மாறுபாடுகளில் பெரும்பாலானவை அவற்றின் பரவலில் வேறுபடுகின்றன, ஆனால் பொதுவாக அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. வயதானவர்கள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது இணை நோய் உள்ளவர்கள் தவிர, பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்த மாறுபாடுகள் லேசானவையாகவே உள்ளன.

ஒருவர் எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்?

சோதனை நெறிமுறைகள் அப்படியே உள்ளன. உங்களுக்கு நிமோனியா இருந்தால் ஒழிய பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நொய்டாவின் சாரதா மருத்துவமனையின் டாக்டர் சுபேந்து மொஹந்தி தெரிவித்தார்.

என்ன சோதனைகள் உள்ளன?

ஐசிஎம்ஆரின் கூற்றுப்படி, இந்தியாவில் SARS-CoV-2 நோயைக் கண்டறிவதில் ரியல் டைம் RTPCR மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் (RAT) முதன்மையானவை.

ICMR இன் வழிகாட்டுதல்களின்படி, TrueNat, CBNAAT, CRISPR, RT-LAMP மற்றும் Rapid Molecular Testing Systems மூலமாகவும் சோதனையை மேற்கொள்ளலாம்.

ICMR மூன்று முக்கிய வகையான கோவிட் சோதனைகளை பட்டியலிடுகிறது - பிசிஆர் சோதனை, கொரோனா வைரஸின் மரபணுப் பொருளைக் கண்டறியும். ஆன்டிஜென் சோதனைகள் கொரோனா வைரஸ் புரதங்களைக் கண்டறியும்.

மேலும் அரசு மற்றும் தனியார் ஆய்வக நெட்வொர்க்குகளால் நடத்தப்படும் சில மூலக்கூறு சோதனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று Truenat RTPCR ஆகும், இது ஒரு மணி நேரத்தில் சோதனை முடிவுகளை வழங்கும். இது தவிர, பல உள்நாட்டு சோதனைகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்டவை கூட, ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பல ஆன்டிஜென் சோதனைகளும் பரவலாகக் கிடைக்கின்றன என்று டாக்டர் சந்திரசேகர் நாயர் கூறினார்.

ஒருவர் கொரோனா பாசிட்டிவ்வா இல்லையா என்பதை மட்டுமே சோதனை தீர்மானிக்கும் என்பதால், எந்தவொரு வைரஸ் மாறுபாட்டிற்கும் சோதனை வழிமுறை ஒரே மாதிரியாக இருக்கும் என்று டாக்டர் டெதியா கூறினார்.

மாறுபாட்டை அடையாளம் காண்பதற்கான ஒரே வழி, மாறுபாட்டின் மரபணு சோதனை ஆகும், இது அதன் பரம்பரை மற்றும் அதன் மரபணு வரிசையை தீர்மானிக்க தேசிய வைராலஜி மையங்களில் செய்யப்படுகிறது என்று டாக்டர் டெதியா குறிப்பிட்டார்.

பரிசோதனை செய்வது எப்படி?

சுய-பரிசோதனை/RAT மற்றும் மூலக்கூறு சோதனை ஆகியவை மீண்டும் மீண்டும் சோதனை செய்யாமல் உறுதிப்படுத்துவதாகக் கருதப்பட வேண்டும் என்றும் ICMR கூறுகிறது.

கோவிட் சகாப்தம் முடிந்துவிட்டது என்ற நம்பிக்கையை மறுத்த டாக்டர் நாயர், சோதனையை வழக்கமான நடைமுறையாக தொடர வேண்டும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களில். இது அவ்வப்போது பரவலை கண்காணிக்கவும், பாதிப்புகளின் அதிகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும், சரியான நேரத்தில் சிகிச்சையை வழங்கவும் உதவும் என்றார்.

சோதனைக்கு முன் ஏற்பாடுகள்

- நீங்கள் ஒரு சுத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

- மேசையின் மேற்பரப்பை சுத்தப்படுத்தவும்.

- சோப்புடன் உங்கள் கைகளை கழுவவும், சோதனை செய்வதற்கு முன் கைகள் உலர்ந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

-சோதனை கருவியின் பையை கிழித்து, கிட்டின் உள்ளடக்கங்களை மேசையில் வைக்கவும்.

- நீங்கள் தொடர்வதற்கு முன், சோதனைக் கருவியில் குறிப்பிடப்பட்டுள்ள செயலியை பதிவிறக்கி, நிரப்பவும். எந்த பாசிட்டிவ் பாதிப்பும் தவறவிடாமல் இருக்க இது முக்கியம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment