கோவிட் 19 கேள்விகள்: நீராவி பிடிப்பது – வாய் கொப்பளிப்பது காற்றில் வைரஸ் துகள்களை வெளியேற்றுமா?

நீராவி பிடிப்பது அல்லது வாய் கொப்பளிப்பது இதமாக இருக்கும். ஆனால், அது கோவிட் 19க்கு மருந்து அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Covid-19 questions, கோவிட் 19, நீராவி பிடிப்பது, வாய் கொப்பளிப்பது, steam inhalation gargling, virus particles, வைரஸ் துகள்கள், coronavirus, covid 19 fact check

சமீபத்தில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அந்த வீடியோவில், ஒரு மருத்துவர் கோவிட் 19 நோயாளிகளுக்கு நீராவி பிடிப்பதற்கும் அடித் தொண்டையில் தண்ணீர் கொப்பளிப்பதற்கும் எதிராக அறிவுறுத்தினார். இப்படி செய்வது வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கிறது என்று கூறினார்.

“கோவிட் நோயாளிகள் வாய் கொப்பளிக்கும்போது அல்லது நீராவி பிடிக்கும்போது ​​காற்றில் வைரஸ் துகள்களை வெளியிடுகின்றன. இந்த வைரஸ் துகள்கள் பல மீட்டர் சென்று அவை பல மணி நேரம் காற்றில் இடைநிறுத்தப்படலாம். குடும்பங்கள் மற்றும் உள் இடங்களுக்குள் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அதனால், இந்த நடைமுறைகளை தவிர்க்க வேண்டும்.” என்று டாக்டர் துஷார்ர் ஷா இந்த வீடியோவில் கூறினார்.

இருப்பினும், இதை ஜிண்டால் நேச்சர் க்யூர் நிறுவனத்தின் உதவி தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கே சண்முகம் இதை ஏற்கவில்லை. “வாய் கொப்பளிப்பது மற்றும் நீராவி பிடித்தலால் எந்தவொரு வைரஸையும் காற்றில் விடுவிக்க முடியாது” என்று கூறினார். இது தவிர, ஒரு நபர் கொரோனா வைரஸுக்கு தொற்று உறுதி என பரிசோதனை செய்யும்போது ​​அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் தொடர்பைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

டாக்டர் சண்முகம் மேலும் கூறுகையில், “இருமும்போது அல்லது தும்மும்போது, ​​நீர்த்துளிகள் வைரஸை சுமந்து தொற்றுநோயை பரப்புகின்றன. மிகப்பெரிய நீர்த்துளிகள் காற்றில் விரைவாக வெளியேறி , சில நொடிகளில் இருந்து சில நிமிடங்களுக்குள் நின்று காய்ந்துவிடும். இந்த மிகச்சிறிய நீர்த்துளிகள், நீர்குமிழ் துகள்கள், சில நிமிடங்கள் முதல் மணிநேரம் வரை காற்றில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.” என்று கூறினார்.

ஷாலிமார் பாக், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு இயக்குநர் டாக்டர் விகாஸ் மௌரியாவும், நீராவி பிடிப்பது அல்லது வாய் கொப்பளிப்பது வைரஸைப் பரப்பும் என்ற கூற்று உண்மையல்ல என்று கூறினார்.

சுவாசப் பாதைகளை இதமாக்கவும் சளி மற்றும் சைனஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளைப் போக்கவும் நீராவி பிடித்தல் மற்றும் வாய்கொப்பளித்தல் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வீட்டு வைத்தியம்.

இருப்பினும், நீராவி பிடிப்பது நிவாரணம் அளிக்கும் என்கிற அதே வேளையில், இது கோவிட் 19க்கு மருந்து அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். “நீராவி எப்போதும் உதவுகிறது. ஆனால், அது ஒரு சிகிச்சை அல்ல. நீங்கள் துளசி, வேம்பு அல்லது இஞ்சி போட்டால் பரவாயில்லை. அறிகுறிகள் அல்லது தொற்று உறுதி செய்திருந்தால் தயவுசெய்து மருத்துவரை அணுகுங்கள். நீங்களே ஏதாவது செய்யாதீர்கள். இவை தற்காலிக நிவாரண நடவடிக்கைகள், அவை உங்களை நன்றாக உணர வைக்கும். ஆனால், அவை கோவிட் 19ஐ குணப்படுத்தாது”என்று டாக்டர் மௌரியா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 questions can steam inhalation or gargling release virus particles in the air

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com