பீரியட் நேரத்தில் பெண்கள் தடுப்பூசி போடக்கூடாதா? சோசியல் மீடியா வதந்திக்கு அரசு மறுப்பு

பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு ஐந்து நாட்களுக்கு முன்னும் பின்னும் கோவிட் -19 தடுப்பூசிகளை எடுக்கக்கூடாது என்று சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்ட பிறகு கவலைகள் தூண்டப்பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது.

COVID 19 vaccination, covid 19 vaccine, menstruation, கோவிட் 19, கொரொனா தடுப்பூசி, கோவிட் 19 தடுப்பூசி, சோசியல் மீடியா வதந்தி, பீரியட் நேரத்தில் தடுப்பூசி போடலாமா Government debunks social media rumours, may 1

பெண்கள் மாதவிடாய் நாட்களில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது என்று கூறும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. அரசாங்கம் இப்போத் அந்த வதந்திகளை மறுத்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, பல பெண்கள் மாதவிடாய் நாட்களில் கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்து கவலைகள் எழுப்பிய செய்திகள் உலா வருகின்றன.

மாதவிடாய் நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும் என்பதால், சிறுமிகளும் பெண்களும் மாதவிடாய்க்கு 5 நாட்கள் முன்னும் பின்னும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சோசியல் மீடியா பதிவு ஒன்று பரிந்துரைக்கிறது.

அரசாங்கம் பத்திரிகை செய்தி பிரிவு ட்விட்டரில், “வதந்திகளுக்கு ஆளாகாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“பெண்கள் மாதவிடாய்க்கு 5 நாட்களுக்கு முன்னும் பின்னும் COVID19 தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்று சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான பதிவு உலாவருகிறது. யாரும் இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மே 1க்கு பிறகு தடுப்பூசி போட வேண்டும்” என்று அரசு செய்திப் பிரிவு ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகப்பேறு மருத்துவர் டாக்டர் முஞ்ஜால் வி கபாடியா கூறுகையில், “சில அல்பமான வாட்ஸ்அப் வதந்திகள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. உங்கள் பீரியடில் தடுப்பூசி செயல்திறன் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உங்களால் முடிந்தவரை விரைவாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து இதனை பரப்புங்கள்” என்று தெரிவித்தார்.

மும்பையில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் வைஷாலி ஜோஷி, இதற்கு முன்னர் indianexpress.com-க்கு அளித்த பேட்டியில், “கோவிட் தடுப்பூசி மாதவிடாயில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது” என்று கூறினார்.

“கோவிட்-19 தடுப்பூசி மாதவிடாயையும் அதன் போக்கையும் பாதிக்கிறது என்ற கருத்தை சரிபார்க்க எந்த தரவும் இல்லை. இந்த கருத்து சமூக ஊடகங்களிலிருந்து தோன்றியது. சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அனைத்து சர்வதேச ஆலோசனைக் குழுக்களும் அமைப்புகளும் இதை ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், மாதவிடாய் இருப்பைப் பொறுத்து ஒருவர் தடுப்பூசி தேதியை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

எனவே, கர்ப்பிணிப் பெண்களைத் தவிர, 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களும், அவர்களுடைய பீரியட் (மாதவிடாய்), ஹார்மோன் நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தடுப்பூசி போட வேண்டும். தற்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்தியாவில் பரிந்துரைக்கப்படவில்லை.” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 vaccination effect menstruation rumours government quashed social media rumours

Next Story
பாட்டு, பீட்டு, டான்ஸ்… கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லாத கிகி – சாந்தனு யூடியூப் சேனல்!Kiki Shantanu Youtube Channel Viral Content Videos Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com