இந்திய சுகாதார அமைச்சகம் 12-14 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியை அறிவித்துள்ளது. ஒரு பத்திரிகை அறிக்கையில், “விஞ்ஞான அமைப்புகளுடன் உரிய ஆலோசனைக்குப் பிறகு”, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.
2008, 2009, 2010 இல் பிறந்த குழந்தைகளுக்கு அல்லது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும். ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனத்தின் கார்பேவாக்ஸ் (Corbevax ) தடுப்பூசி போடப்படும் என்று அது தெரிவித்தது.
இது தடுப்பூசி மேம்பாட்டுக்கான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவ மையம், ஹூஸ்டனில் உள்ள பேய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின் மற்றும் கலிபோர்னியாவின் எமரிவில்லில் உள்ள டைனாவாக்ஸ் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டது. இது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி, இது கோவாக்சின் போலவே 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும்.
15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்கனவே ஜனவரி 3, 2022 முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தினார்.
எப்படி பதிவு செய்வது?
*அதே CoWIN செயலி அல்லது ஆரோக்கிய சேதுவில், பெற்றோரின் மொபைல் ஃபோனில் ஒன்றைப் பயன்படுத்தி குழந்தைக்கு தடுப்பூசி போட பதிவு செய்யலாம்.
*சரிபார்ப்பிற்கு தேவையான OTP ஜெனரேட் செய்யப்படும்.
*ஆதார் அட்டையைப் பயன்படுத்தி புதிய கேட்டகிரியின் கீழ் குழந்தையின் அடையாளச் சான்று புதுப்பிக்கப்பட்டதும், அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் விரும்பிய நேரத்தில் குழந்தையின் தடுப்பூசி ஸ்லாட்டை, பெற்றோர் முன்பதிவு செய்யலாம்.
ஏன் அவசியம்?
குழந்தைக்கு தொற்று ஏற்படுவதையும், கொரோனா வைரஸ் பரவுவதையும் இது தடுக்க உதவுகிறது.
தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதை விட, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது குழந்தைக்கு பாதுகாப்பானது என்ற கட்டுக்கதை குறித்து’ indianexpress.com இடம் பேசிய Ikris Pharma Network இன் தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் சிக்ரி’ "குழந்தைகளின் ஆபத்துகள் பெரியவர்களைப் போலவே இருக்கும். குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கும் போது, அவர்கள் பல நாட்கள் நோய்வாய்ப்படலாம், மேலும் கொரோனாவுக்கு பிந்தைய நீடித்த நிலைமைகளுக்கும் வாய்ப்பு உள்ளது.
கொரோனா தடுப்பூசி போடுவதால், குழந்தையை கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க முடியும். ஒரு குழந்தை கொரோனா தொற்றுக்கு ஆளாகும்போது, இது கடுமையான நோய், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் அல்லது நீண்ட கால சிக்கல்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் எதிர்கால கொரோனா வைரஸ் அலைகளைத் தடுக்க உதவும். 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்.
யாருக்கு கூடாது?
UNICEF வழிகாட்டுதல்களில், தடுப்பூசியின் உட்பொருட்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக அறியப்பட்ட வரலாற்றைக் கொண்ட குழந்தைக்கு தடுப்பூசி போடக்கூடாது. நோய்த்தொற்றுகள் மற்றும் வேறு ஏதேனும் தற்போதைய நோய் உள்ள குழந்தைகளுக்கு, சரியான வழிகாட்டுதலைப் பெற, அவர்களின் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
குழந்தைகளும் பக்கவிளைவுகளை அனுபவிக்கிறார்களா?
சில குழந்தைகளுக்கு ஊசி போட்ட இடத்தில் லேசான வலியும், வீக்கமும் இருக்கலாம், வழக்கத்தை விட அதிகமாக சோர்வாக உணரலாம் என்றும் யுனிசெஃப் குறிப்பிடுகிறது. தலைவலி, உடல்வலி, காய்ச்சல் மற்றும் குளிர்ச்சியும் வரலாம். இருப்பினும், இந்த பக்க விளைவுகள் பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் சரியாகும்.
முன்னெச்சரிக்கை
*வெறும் வயிற்றில் தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.
*தடுப்பூசி போட்ட பிறகு, தடுப்பூசி போடும் மையத்தில் 30 நிமிடங்கள் காத்திருக்கவும்.
*இந்த காலகட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், மையத்தில் உள்ள ஊழியர்களிடம் ஆலோசனை பெறவும்.
*தடுப்பூசி போடும் போதும், அதற்குப் பின்னரும் கூட, ஒருவர் கொரோனா நோய்த்தொற்றின் தகுந்த நடத்தைகளான கை கழுவுதல், முகமூடி அணிதல் மற்றும் இடைவெளியைப் பேணுதல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.