கீழே தூக்கிப் போடும் முட்டை ஓடு... பல வருட பித்த வெடிப்பை மறைய வைக்குமாம்: இப்படி செஞ்சு பாருங்க!
நம் வீட்டில் தேவையில்லை என்று கீழே தூக்கிப்போடும் முட்டை ஓடு, பல வருட கால் பித்த வெடிப்பை மறைய வைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?- ஆம். அதற்கு என்ன என்ன பண்ண வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நம் வீட்டில் தேவையில்லை என்று கீழே தூக்கிப்போடும் முட்டை ஓடு, பல வருட கால் பித்த வெடிப்பை மறைய வைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?- ஆம். அதற்கு என்ன என்ன பண்ண வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நம் வீட்டில் தேவையில்லை என்று கீழே தூக்கிப்போடும் முட்டை ஓடு, பல வருட கால் பித்த வெடிப்பை மறைய வைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?- ஆம். அதற்கு என்ன என்ன பண்ண வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். பித்த வெடிப்ப பிரச்னையை வீட்டிலேயே எப்படி சரி பண்ணலாம்னு என்பது குறித்து Nalini Manick Cooking என்ற யூடியூப் சேனலில் ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
தேவையானப் பொருட்கள்:
முட்டை ஓடுகள், தயிர், தேன், சாம்பூ, தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய்.
செய்முறை: தேவையான அளவு முட்டை ஓடுகளை எடுத்து சுடு தண்ணிரில் 10 நிமிடங்கள் ஊரவைக்க வேண்டும். அதன்பின்பு வாசனை வராத அளவிற்கு நன்றாக கழுவி எடுத்து, அதனை மிக்சியில் நன்றாக மாவு போல் அரைத்து எடுக்க வேண்டும். அதனை நன்றாக சலித்து இருபக்குவமாக பிரிக்க வேண்டும். ஒன்று நைஸ் ஆக உள்ள மாவு. மற்றொன்று பெரிய பெரிய துகள்கள் கொண்ட மாவு என இரு பக்குவத்தில் பிரிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
முதலில் பெரிய துகள்கள் கொண்ட முட்டை ஓடு மாவுடன் ஒரு ஸ்பூன் அளவு தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கால் பாதங்களை நன்றாக சுடு தண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு தயாரித்து வைத்துள்ள பேஸ்டை மெதுவாக அப்ளே செய்ய வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
மற்றொரு விதமாக, நைஸ் ஆக அரைத்து வைத்திருக்கக் கூடிய முட்டை ஓடு மாவில் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் செய்ய வேண்டும். கால் பாதங்களை சுத்தப்படுத்தி பேஸ்டை மென்மையாக அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்துவருவதால் கால் பாதங்களில் இருக்கக் கூடிய வெடிப்புகள் நாளடைவில் மறையக் கூடும்.
நன்றி: Nalini Manick Cooking
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.