பித்த வெடிப்பு பிரச்சனை இருக்கா? அப்போ இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
பித்த வெடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ்களை மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். அவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பித்த வெடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியமான டிப்ஸ்களை மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். அவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய சூழலில் நிறைய பேருக்கு கால் ஆணி மற்றும் பித்த வெடிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, நிறைய பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதன்படி, பித்த வெடிப்பு பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளை அவர் பரிந்துரைக்கிறார்.
Advertisment
முதலாவதாக, அங்கீகாரம் பெற்ற பியூட்டி பார்லருக்கு சென்று பெடிக்யூர் செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். இதன் விலை சுமார் ரூ. 350-ல் இருந்து ரூ. 500-வரை ஆகலாம். இதன் மூலம் நம்முடைய பாதத்தை எளிதாக சுத்தம் செய்ய முடியும் என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு ஒரு முறை செய்ததும் நம்முடைய பாதம் சுத்தமாகி விடும். இதன் பின்னர் சில வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்ற எளிதாக இருக்கும். இதற்கு அடுத்தபடியாக தினசரி இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக 5 துளிகள் தேங்காய் எண்ணெய் கொண்டு பாதத்தை மசாஜ் செய்யலாம்.
மேலும், ஒரு படிகக்கல்லை கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். நாள்தோறும் குளித்த பின்னர், இந்தக் கல்லை கொண்டு நம்முடைய பாதத்தை மெதுவாக தேய்க்க வேண்டும். இந்தக் கல் பாதங்களில் ஸ்க்ரப்பர் போன்று செயல்படும். இவ்வாறு தேய்த்த பின்னர், பாதங்களை கழுவி விடலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக அல்லது நாம் ஓய்வாக இருக்கும் நேரத்தில் மற்றொரு பராமரிப்பு முறையையும் பின்பற்றலாம். அதன்படி, கால் பக்கெட் தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சமாக மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து, அந்த தண்ணீரில் பாதத்தை சுமார் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இப்படி செய்வதால் நம்முடைய பாதம் சுத்தமாகும்.
இறுதியாக, வீட்டிற்குள் நடக்கும் போது செருப்பு போட்டு நடக்கும் பழக்கத்தை கடைபிடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். இவை அனைத்தையும் தவறாமல் பின்பற்றும் போது, கால் ஆணி மற்றும் பித்த வெடிப்பு போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா வலியுறுத்துகிறார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.